Actor Kamalhassan: ஒரு வழியாக கமல் நடிப்பில் நீண்ட வருடமாக உருவாகிக் கொண்டிருந்த இந்தியன் 2 படத்திற்கு விடிவுகாலம் பிறந்து விட்டது. அதாவது இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்த நிலையில் இதற்கு திருஷ்டி கழிக்கும் விதமாக முழு பூசணிக்காயை எடுத்து மொத்த டீமுக்கும் சுத்தி உடைச்சாச்சு. அதற்காக இயக்குனர் சங்கருக்கு கிப்ட் கொடுக்கும் விதமாக விலை மதிப்பு மிகுந்த வாட்ச்சை பரிசளித்து விட்டார்.
தற்போது பெருமூச்சு விட்டு நிம்மதி அடைந்திருக்கிறார் உலக நாயகன். அடுத்து ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதற்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகளில் உடனடியாக இறங்கி விட்டார். அதாவது சொல்வார்களே எப்பொழுதும் நிற்காமல் ஓடிக்கிட்டே இருக்க வேண்டும் என்று அதை கமல் சரியாக பாலோ செய்து விட்டு வருகிறார்.
மேலும் இவருடைய அடுத்த பிராஜெக்ட் விஷயமாக சென்னையில் உள்ள ஹோட்டலை குத்தகை எடுக்கும் விதமாக அங்கேயே தவமாய் இருக்கிறார். அதாவது இவருடைய ராசியான ஹோட்டல் எது என்றால் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சோமசெட் ஹோட்டல் தான். முக்கால்வாசி இவருடைய படத்திற்கான அஸ்திவாரத்தை இங்கே வைத்துதான் போடுவார்.
அந்த வகையில் இவர் தயாரிக்க இருக்கும் இரண்டு படத்திற்கான ப்ராஜெட்டையும் இங்கு வைத்து தான் ஆரம்பிக்கப் போகிறார். அதற்காக ராஜ்குமார் பெரியசாமி மற்றும் சிவகார்த்திகேயன் இவர்கள் இருவருக்கும் இங்கேதான் ரூம் போட்டு கொடுத்திருக்கிறார். இங்கே வைத்து தான் பிராஜெட் சம்பந்தமான டிஸ்கசன் நடைபெறுகிறது.
அடுத்தபடியாக தேசிங்கு பெரியசாமி மற்றும் சிம்பு ப்ராஜெட்டும் அங்குதான் நடைபெறுகிறது. அதனால் அவர்களுக்கான ரூமையும் அதே ஹோட்டலில் புக் பண்ணி விட்டார். அத்துடன் கமல் மற்றும் எச் வினோத் ப்ராஜெட்டும் அங்கு வைத்து தான் டிஸ்கசன் போய்க் கொண்டிருக்கிறது.
ஆக மொத்தத்தில் அந்த ஹோட்டலில் உள்ள மொத்த ரூமும் ராஜ்கமல் பிலிம்ஸ் கண்ட்ரோலுக்கு வந்துவிட்டது. மேலும் உலகநாயகன் தயாரிக்கும் படங்கள் என்பதால் எந்தவித கேள்வியும் கேட்காமல் வாலை சுருட்டிக் கொண்டு இவர் பின்னாடியே சிம்பு மற்றும் சிவகார்த்திகேயன் அந்த ஹோட்டலில் தவமாய் இருக்கிறார்கள்.