திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

நயன்தாரா இடத்தை நிரப்பப் போகும் 6 ஹீரோயின்.. அதுலயும் இவங்க ரொம்ப மோசம்!

தமிழ் சினிமாவிற்கு கடந்த 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான கேரள நடிகை நயன்தாராவை தென்னிந்திய ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்று அவருடைய அசத்தலான நடிப்பினால் தலையில் தூக்கிக் கொண்டாடி வருகின்றனர். அத்துடன் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாராவிற்கு தான் முதலிடம்.

இப்படி சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் நயன்தாரா, 6 ஆண்டுகளாக காதலித்துக் கொண்டிருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பரை வருகிற ஜூன் 9-ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார். திருமணத்திற்குப் பிறகு நயன்தாராவின் சினிமா வாழ்க்கை எப்படி இருக்கும் என இனிதான் தெரிய வரும். அதுமட்டுமின்றி இவருடைய இடத்தை நிரப்புவதற்காகவே 6 கதாநாயகிகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பிரியங்கா மோகன்: கன்னட படத்தில் அறிமுகமான இவர், தெலுங்கில் ஒரு சில வெற்றிப் படங்களை கொடுத்து தென்னிந்திய அளவில் வரவேற்பு பெற்ற நடிகையாக ரசிகர்களின் மனதை கவர்ந்ததால், தமிழில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்திலும், அதைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான டான் திரைப்படத்தில் மறுபடியும் பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.

மேலும் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ‘தலைவர் 169’ படத்தில் பிரியங்கா மோகன் கமிட்டாகியிருக்கிறார். இதைத்தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் எம் ராஜேஷ் இயக்கவிருக்கும் புதுப் படத்திலும் பிரியங்கா மோகன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படி தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை வரிசையாக தட்டி சென்று கொண்டிருக்கிறார்.

மாளவிகா மோகனன்: ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் அடுத்த படமான தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் வெளியான தனுஷுடன் மாறன் திரைப்படத்திலும் மாளவிகா மோகன் நடித்து அசத்தியிருந்தார். இப்படி தொடக்கத்திலிருந்தே முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாக முனைப்புடன் செயல்படுகிறார்

கீர்த்தி ஷெட்டி: தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமாகி, தன்னுடைய 18 வயதிலேயே முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக மாறிக்கொண்டிருக்கும் கீர்த்தி ரெட்டி சூர்யாவின் 41-வது படத்தின் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

பூஜா ஹெக்டே: ஹிந்தி, தெலுங்கு படங்களில் பெரும்பாலும் நடித்துக்கொண்டிருந்த இவர், தற்போது தமிழ் படங்களில் வரிசையாக கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார். ஜீவாவின் முகமூடி படத்தில் தமிழில் என்ட்ரி கொடுத்து, தளபதி விஜயின் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றிருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து தமிழ் படங்கள் இவரை தேடி வரத் தொடங்கியிருக்கிறது.

ராஷ்மிகா மந்தனா: தமிழில் கார்த்திக் நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமான இவர், புஷ்பா படத்தில் ஆடின ஆட்டத்தால் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையே ஆட்டம் போட வைத்திருக்கிறார். இப்படி வேகமாக வளரும் நடிகையான ராஷ்மிகா, தளபதி 66 படத்தில் நடிக்க உள்ளார். இதுமட்டுமின்றி ஏற்கப்பட்டால் தமிழ், தெலுங்கு படங்களிலும் பெரிய பெரிய நடிகர்களுடன் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

பிரியா பவானி சங்கர்: தொலைக்காட்சி நடிகையாக தமிழ் சினிமாவில் நுழைந்த இவர் மேயாதமான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றது மட்டுமின்றி கமலஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் இந்தியன்2 படத்திலும் முன்னணி கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

‘அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும்’ என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, திருமணமான பிறகு பொட்டியை கட்டி கிளம்பி விடுவதற்கான அறிகுறி தென்படுவதால், அந்த இடத்தை நிரப்புவதற்கு, இந்த ஆறு கதாநாயகிகளும் அவசர அவசரமாக வருகிற படங்களில் எல்லாம் கமிட்டாகி நயன்தாரா இடத்தை தட்டிப் பறிக்க தீவிரமாக செயல்படுகின்றனர்.

Trending News