டாப் ஹீரோக்களை கஸ்டடிக்கு கொண்டு வந்த கமல்.. சிம்பு, சிவகார்த்திகேயனை அடுத்து சிக்கிய நடிகர்

Actor Kamal: உலக நாயகன் இப்போது நடிப்பு, தயாரிப்பு என பிசியாக இருக்கிறார். சமீபத்தில் ஹெச் வினோத் உடன் இவர் இணையப் போகும் அறிவிப்பு ஆரவாரமாக வெளியானது. அதை அடுத்து தற்போது அவர் டாப் ஹீரோ ஒருவரையும் தன்னுடைய வலையில் சிக்க வைத்திருக்கிறார்.

அதாவது கமல் இப்போது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தையும் சிம்புவை வைத்து ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார். இதற்கு அடுத்ததாக அவர் தனுஷை வைத்து படம் தயாரிக்கப் போகிறார் என்ற செய்தி அரசல் புரசலாக வெளிவந்தது. ஆனால் தற்போது அது உண்மையாகி இருக்கிறது.

அதாவது நெல்சன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் படத்தை கமல் தன்னுடைய ராஜ் கமல் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தற்போது முடிவுற்ற நிலையில் ஆரம்பகட்ட பணிகள் இந்த வருட இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அடுத்த வருடத்தில் படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பிக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஏனென்றால் தற்போது தனுஷ் தன்னுடைய 50வது படத்தில் பிஸியாகிவிட்டார். சமீபத்தில் இப்படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கி விட்டது. இதை முடித்துவிட்டு அவர் நெல்சன் உடன் இணைய இருக்கிறார்.

அதேபோன்று சூப்பர் ஸ்டாரை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கியுள்ள நெல்சன் இப்போது தனுசுக்கான கதையை தயார் செய்து கொண்டிருக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படியாக அனைத்து விஷயங்களும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஆண்டவர் டாப் ஹீரோக்கள் அனைவரையும் தன் பக்கம் இழுத்து வருகிறார். இதன் மூலம் இவர் பல மடங்கு லாபத்தையும் பார்க்க திட்டமிட்டுள்ளார். விக்ரம் படத்தின் மூலம் கிடைத்த லாபத்தை இவ்வாறு டாப் ஹீரோக்களின் படங்களில் முதலீடு செய்து வரும் ஆண்டவர் விஜய், அஜித் படங்களை தயாரிக்கும் எண்ணத்திலும் இருக்கிறாராம்.