சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

2023-ல் அதிக படம் நடித்த 5 ஹீரோக்கள்.. தோல்வியிலும் துவழாத விஜய் ஆண்டனி

Vijay Antony: சினிமாவில் இப்போதெல்லாம் வருடத்திற்கு ஒரு படம் பண்ணுவது என்பதே அரிதாகி விட்டது. அப்படி இருக்கும் பொழுது இந்த ஐந்து ஹீரோக்கள் இந்த 2023 ஆம் ஆண்டு அதிக எண்ணிக்கையிலான படங்களை பண்ணியிருக்கிறார்கள். அதிலும் பெரும்பாலும் வெற்றி படங்களை தான் கொடுத்திருக்கிறார்கள். யார் அந்த ஐந்து ஹீரோக்கள் என்பதை பற்றி பார்க்கலாம்.

அதிக படங்கள் நடித்த ஹீரோக்கள்

விஜய் ஆண்டனி: விஜய் ஆண்டனிக்கு இந்த வருடம் சோதனை காலமாகத்தான் இருந்தது. பிச்சைக்காரன் 2 படத்திற்கான ஷூட்டிங்கின் போது அவருக்கு பெரிய விபத்து ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவருடைய மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையெல்லாம் தாண்டி விஜய் ஆண்டனி இந்த வருடம் பிச்சைக்காரன் 2, ரத்தம், கொலை, தமிழரசன் என்ற நான்கு படங்களை ரிலீஸ் செய்திருக்கிறார்.

ஜெயம் ரவி: நடிகர் ஜெயம் ரவிக்கு இந்த வருடம் அதிர்ஷ்டமான வருடம் தான். பொன்னியின் செல்வன் இலக்கியத்தின் முக்கியமான கேரக்டர் ஆன அருண்மொழிவர்மன் கேரக்டர் அவருக்கு கிடைத்தது. பொன்னியின் செல்வன், அகிலன் மற்றும் இறைவன் என இந்த வருடம் அவர் மூன்று படங்களில் நடித்து அந்த படம் ரிலீஸ் ஆனது. இதில் அகிலன் மற்றும் இறைவன் பெரிய அளவில் வெற்றியடையவில்லை.

Also Read:10 வருடம் குடியினால் கேரியரை சீரழித்த நடிகை.. விஜய் சூர்யா என ரவுண்டு கட்டியும் பயனில்லை

சந்தானம்: கடந்த வருடம் முழுக்க தோல்வி படங்களை கொடுத்து வந்த சந்தானம் இந்த வருடம் மீண்டும் ஃபார்முக்கு வந்தார். டி டி ரிட்டன்ஸ் படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. அதைத் தொடர்ந்து வெளியான கிக் மற்றும் 80ஸ் பில்டப் படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை. மொத்தமா அவர் இந்த வருடம் 3 படங்கள் நடித்தார்.

கார்த்தி: பொன்னியின் செல்வன் நாவலை காலம் காலமாக படித்த வாசகர்களுக்கு வந்தியத்தேவன் மீது அதீத பற்று இருந்து வருகிறது. அந்த வந்தியத்தேவன் கேரக்டரை கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தில் கண் முன் கொண்டு வந்தார். அதற்கு பின் அவருக்கு ரிலீஸ் ஆன ஜப்பான் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறது.

விஜய்: இந்த வருட பொங்கல் ரிலீஸ் ஆக விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு படங்கள் ரிலீஸ் ஆகி ரணகளப்படுத்தியது. அதைத் தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக இணைந்த லியோ படம் ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி ரிலீஸ் ஆனது. வாரிசு மற்றும் லியோ என விஜய்க்கு இந்த வருடம் ரிலீஸ் ஆன இரண்டு படங்களுமே டீசென்ட் ஹிட் ஆக அமைந்தது.

Also Read:ஆசை தம்பிக்கு அல்வா கொடுத்த விஜய்.. அரசியலை விட நடிப்புதான் முக்கியம்னு தளபதி 69-க்கு கமிட்டான தளபதி

 

Trending News