தமிழ் சினிமாவில் முதல் படத்தில் மட்டுமே நடித்து பின்பு எந்த ஒரு பட வாய்ப்பும் வராமல் சினிமாவை விட்டு விலகிய நடிகைகளின் பட்டியல் இதோ
ரியா சென்: விஸ்கன்யா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக ரியா சென் அறிமுகமானார். அதன்பிறகு இவர் தமிழ் சினிமாவில் நடித்த தாஜ்மஹால் படத்தின் மூலம் ரசிகர்கள் கொண்டாடக்கூடிய நடிகையாக வலம் வந்தார்.
இந்தப்படம் வெளியான சமயத்தில் பல இளைஞர்களும் இந்த நடிகையை மனதில் காதலித்து வந்தனர். அதுமட்டுமில்லாமல் சிறிது காலம் தமிழ் சினிமாவில் சுற்றி வருவார் என எதிர்பார்த்த நிலையில் அவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் அமையவில்லை.
பிரியா கில்: தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான ரெட் படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை பிரியா கில். இந்த படத்தில் “ஒல்லி குச்சி உடம்புக்காரி” எனும் பாடல் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் சென்றடைந்தார்.
மேலும் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறப்பார் என எதிர்பார்த்த நிலையில் அவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் இன்று வரை அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரிங்கி கன்னா: மஜ்னு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ரிங்கி கன்னா. இந்த படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார். ஆனால் இவர் எதிர்பார்த்த அளவிற்கு தமிழ் சினிமாவில் இவருக்கான இடம் கிடைக்கவில்லை.
அதனால் மனமுடைந்த இவர் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து விட்டு பின்பு அவரது சராசரி வாழ்க்கை வாழ ஆரம்பித்து விட்டார் என்று கூறலாம்.
மானு: தமிழ் சினிமாவில் காதல் மன்னன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் மானு. “உன்னை பார்த்த பின்பு தான்” எனும் பாடல் மூலம் தமிழ் ரசிகர்களின் நினைவில் இன்றும் இருக்கிறார். ஆனால் இவர் எதிர்பார்த்த அளவிற்கு தமிழ் சினிமாவில் கதாநாயகிக்கான இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிகா காஸ்டெலினோ: மின்சார கண்ணா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் மோனிகா காஸ்டெலினோ. இப்படத்தில் திமிரு பிடித்த அக்காவாக குஷ்புவும் அவருக்கு தங்கச்சியாக மோனிகா காஸ்டெலினோவும் நடித்திருந்தனர்.
முதல் படமே மாபெரும் வெற்றி அடைந்ததால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது வரை எந்த ஒரு தமிழ் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.