சினிமாவைப் பொருத்தவரை பல இயக்குனர்களும் தங்களுக்கு யோசனையில் வரக்கூடியதை வைத்து படங்களாக எடுத்து விடுவார்கள். அப்படி பல படங்கள் ரசிகர் மத்தியில் வரவேற்பு கிடைத்தாலும் ஒரு சில படங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
மகாராஷ்டிராவில் பெண்கள் அமைப்பு வைத்து ஒரு படத்தை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இரண்டு நாள் கழித்து சிவசேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் இப்பிரச்சனையை கையில் எடுத்து பின்பு விஷயம் காட்டுத்தீ போல் பரவியது.
அதாவது தீ படம் ஓடிக் கொண்டிருக்கும் போது இன்டர்வல் சமயத்தில் ஒரு கும்பல் புகுந்து தியேட்டரை அடித்து நொறுக்கி ஸ்க்ரீனை கிழித்து எறிந்தனர்.
அதேபோல் பாம்பேயில் மறுநாள் காலையிலும் டெல்லியில் ராகுல் சினிமா என்ற தியேட்டரையும் சூறையாடப்பட்டது.
அதற்கு காரணம் ஒரு பெண்ணும் பெண்ணும் உடலுறவு வைத்துக் கொள்வது போல் படம், அதனால் பல பிரச்சனைகளை சந்தித்தது.
அதுமட்டுமில்லாமல் படத்தில் முத்தக் காட்சிகள் இருந்ததால் பின்பு இந்திய கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு என தெரிவித்து தியேட்டரைவிட்டு இப்படம் தூக்கப்பட்டது. ஆனால் தற்போது அரசாங்கமே ஒரு சில மாநிலங்களில் பெண்ணும் பெண்ணும் உடலுறவு வைத்துக் கொள்வதற்கு அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.