மரணப்படுக்கையில் அஜித்தின் குரலை கேட்க துடித்த ரசிகன்.. கடைசிவரை நிறைவேறாமல் போன சம்பவம்!

ரசிகர்களால் தல என்று அன்போடு அழைக்கப்படுபவர் தான் “அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார்”. இவர் தன்னம்பிக்கையாலும் விடாமுயற்சியாலும் இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்துள்ளார்.

அஜித்குமார் ஹைதராபாத்தில் பிறந்தவர், தமிழ் திரைப்படங்களில் நடிப்பதன் மூலமாக தமிழை கற்றுக்கொண்டார். தமிழ் சினிமாவில் “அமராவதி “என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

அதன் பிறகு பல திரைப்பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. நடிகர் மட்டுமல்லாது ஒரு சிறந்த “கார் பந்தயகார்”. மேலும் இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார் அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளியிடும் ” போர்ப்ஸ்” பத்திரிக்கை இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் என்ற பட்டியலில் “அஜித்குமார் 2012 ஆம் ஆண்டு 61வது இடம் பெற்றார்”.

பிறகு 2017 ஆம் ஆண்டு 51 இடத்திற்கு முன்னேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பல புகழும் பாராட்டும் பெற்ற இவர் ரசிகர்களின் சந்தித்தால் அவர்களிடம் கைகுலுக்கி புகைப்படம் எடுத்துக்கொள்வார்.

இருப்பினும் தற்போது ஒரு சோகமான செய்தி வெளியாகியுள்ளது அஜித் ரசிகரான ஒருவர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட இருந்தார். அத் தருவாயிலும் கூட அஜித்தை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும், அச்செய்தி அஜித்தின் செவிக்கு சென்றும் அவர் பார்க்க வரவில்லை.

அந்த ரசிகர் மரண படுக்கையில் இருக்கும் நிலையில் அஜித்தின் குரலை கேட்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆனால் அஜித்திடம் பேசாமலேயே அவர் இறந்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

ஏன் அஜித் இவ்வாறு செய்தார்? அவருடைய செவிக்கு இச்செய்தி சென்றது உண்மைதானா ? என தற்போது கோலிவுட் வட்டாரம் மற்றும் ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளது. கடவுளே அவர் காதுக்கு இந்த செய்தி போயிருக்கக் கூடாது என்று ரசிகர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.

ajith-fan
ajith-fan