கடந்த சில வருடங்களாக தொடர் தோல்விகளில் தவித்துக் கொண்டிருந்த சூர்யாவுக்கு சூரரைப்போற்று திரைப்படம் ஒரு கம்பாக் படமாக அமைந்தது. ஆனால் அந்த படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் மீண்டும் திரையரங்குகளில் சூர்யா மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் அடுத்தடுத்து தான் நடிக்கும் படங்களின் இயக்குனர்களை கவனமாக தேர்வு செய்து வருகிறார்.
அதில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார், அதனைத் தொடர்ந்து கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படமும் உருவாக உள்ளது.
இதற்கிடையில் சூர்யா கூட்டத்தில் ஒருவன் என்ற படத்தை எடுத்த ஞானவேல் இயக்கத்தில் ஜெய்பீம் என்ற படத்தில் வழக்கறிஞர் வேடத்தில் நடித்து வருகிறார். மலைவாழ் மக்களின் பிரச்சனைகளை கையிலெடுத்திருக்கும் இந்த படத்தில் முதலில் கெஸ்ட் ரோலில் நடிக்கத்தான் சூர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் படத்தின் கதை சூர்யாவுக்கு மிகவும் பிடித்துப்போக தன்னுடைய போர்ஷனை சூர்யா வரும் காட்சிகளை அதிகமாகி தற்போது முழு சூர்யா படமாக மாறியுள்ளது ஜெய் பீம். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட சூர்யாவின் பிறந்த நாளன்று வெளியாகி வைரல் ஆனது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைத்து மொழிகளிலும் வெளியான போதே இந்த படம் கண்டிப்பாக ஓடிடியில் வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது. தற்போது அது உண்மையாகி விட்டது. சூர்யாவின் ஜெய்பீம் படமும் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாம். இதனால் தொடர்ந்து சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியாவதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
