தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் அஜித். ஒரு நடிகர் என்பதை தாண்டி சிறந்த மனிதராக திகழ்ந்து வருவதால் இவருக்கு தமிழ் மட்டுமின்றி இதர மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதேபோன்று இவரது படங்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உள்ளது.
சமீபகாலமாக ஒரே இயக்குனரின் படத்தில் அடுத்தடுத்து அஜித் நடித்து வருகிறார். முன்னதாக இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் என தொடர்ந்து மூன்று படங்களில் அஜித் நடித்திருந்தார். இதனை அடுத்து இயக்குனர் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்த அஜித் தற்போது இரண்டாவது முறையாக வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார். இதனையடுத்து மீண்டும் போனி கபூர் மற்றும் இயக்குனர் வினோத் கூட்டணியில் அஜித் மற்றொரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பு தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடையவில்லை. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு மட்டும் இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் முதலில் அஜித் இந்த படத்திற்கு ரூபாய் 55 கோடி சம்பளமாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஷூட்டிங் தொடங்குவதற்கு காலதாமதம் ஆனதால் தன்னுடைய சம்பளத்தை 70 கோடியாக உயர்த்தி விட்டதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளன. இருப்பினும் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி தான் அதிகமாக பரவி வருகிறது.