தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பரத். இவரது நடிப்பில் வெளியான படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
பரத் நடித்த படங்களில் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்து திரைப்படம் காதல் திரைப்படம். இப்படம் காதலை மையமாகக் கொண்டு எடுத்ததால் காதலர்கள் அனைவரும் கொண்டாடினர். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சந்தியா நடித்திருந்தார்.
இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே ரசிகருடன் பெரிய அளவில் வெற்றி பெற்றன. இப்படத்தை பிரம்மாண்ட ஷங்கர் தயாரித்திருந்தார். பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்தார். அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது. இப்படத்தில் நடித்த கதாபாத்திரங்களும் பெரிய வரவேற்பை பெற்றன.
அதிலும் குறிப்பாக பரத்திற்கு உதவியாக நடித்திருக்கும் அருண் கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. இவரது குறும்புத்தனமான நடிப்பும் நகைச்சுவை உணர்வுமே இப்படத்திற்கு ஒரு பக்கபலமாக அமைந்தது. மேலும் இவர் விஜய் நடிப்பில் வெளியான சிவகாசி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவர் என்பது அனைவருக்கும் தெரிந்தது.
அதன்பிறகு இவர் பெரிய அளவில் சினிமாவில் வலம் வருவார் என எதிர்பார்த்தனர். ஆனால் அதன் பிறகு இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாததால் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தற்போது அருண் அவரது நீண்ட வருட காதலியை கரம் பிடித்துள்ளார். தற்போது அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். தற்போது இவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.