பல எதிர்பார்ப்புக்கு பின் அஜித்தின் வலிமை பட டிரைலர் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் வலிமை படம் வெளியாகவிருக்கிறது.
போனி கபூர் தயாரிப்பில், பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அஜித் படங்களில் வந்த ட்ரெய்லர்களிலே இதுதான் அதிக நேரம் கொண்ட முன்னோட்ட வீடியோ. கிட்டத்தட்ட (3.06) நிமிடங்கள் இந்த டிரைலர் வீடியோ இடம்பெறுகிறது.
மூன்று நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவைப் பார்த்த பலர் அதன் கதை இதுதான் என்று சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதைப்பற்றி வலிமை படத்தின் தயாரிப்பாளர், எச் வினோத்திடம் கேட்கப்பட்ட கேள்வியில் அவர் கூறியதாவது.
சினிமா குறித்த தேடல்களும், பார்வைகளும், ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ளவர்கள் பல படங்களை பார்க்கிறார்கள். ஓடிடியில் பல மொழி படங்களையும், உலகத்தரம் வாய்ந்த படங்களையும் பார்க்கிறார்கள்.
அதைப்போன்று கிராமங்களில் உள்ளவர்களுக்கும் ஒருவிதமான சினிமா தேடல் இருக்கும். அவர்கள் மனதிலும் ஒரு கதை தோன்றும். அதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் பல பொய்யான செய்திகளும் எளிதாக பரவுகிறது. இப்படி ஒவ்வொருவரும் மனதில் ஒரு கதையை எதிர்பார்த்து தான் படத்தை பார்க்க செல்கின்றனர், அதை பூர்த்தி செய்தால் மட்டுமே ஒரு படம் வெற்றி அடையும்.
வலிமை படத்தின் ட்ரைலரில் நாங்கள் கதையை முழுவதுமாக சொல்லவில்லை, படத்திற்கு தேவையான, மக்களுக்கு பிடித்தவாறு அடிப்படை விஷயங்களை மட்டுமே ட்ரெய்லரில் உருவாக்கி அதனை வெளியிட்டு இருக்கிறோம். நீங்கள் அனைவரும் எதிர்பார்த்தவாறு, படம் வித்தியாசமான கண்ணோட்டத்தில் இருக்கும், படத்தை தியேட்டரில் கண்டு இன்புறுங்கள் என்று எச் வினோத் தெரிவித்துள்ளார்.