ரஜினியை அசால்டாக ஓரம்கட்டிய கமல்.. இளம் இயக்குநருக்கு போன் போட்ட தலைவர்

உலகநாயகன் கமலஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரீசண்டாக இணையத்தில் வெளியான நிலையில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தின் டிரைலரை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் தலைவர் 169 திரைப்படத்தில் நடிப்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கதைகளை கேட்டு வரும் நிலையில், தற்சமயம் உடல் நிலை சரியாக இல்லாததால் அமெரிக்கா செல்ல உள்ளார். இதனிடையே அமெரிக்காவின் ட்ரீட்மென்ட்கள் முடிந்தபின் நெல்சனின் இயக்கத்தில் தலைவர் 169 திரைப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியான 3 மணி நேரத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்பட ட்ரெய்லரை விட அதிக லைக்ஸ்களை பெற்று சாதனை புரிந்துள்ளது. இதனிடையே இதை பார்த்த சூப்பர் ஸ்டார் கண்டிப்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் ஒரு படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக திரை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இளம் இயக்குனர்கள் உடன் கைகோர்க்க நினைக்கும் சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் கமலஹாசனின் புது முயற்சி ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இதனிடையே அண்ணாத்த படத்தின் தோல்வியை அடுத்து ரஜினிக்கு அடுத்த அடுத்த திரைப்படங்கள் வெற்றியடைய வேண்டும் என்ற உறுதியோடு படங்களின் கதைகளை மிகவும் துல்லியமாக கேட்டு வருகிறார்.

இதனிடையே இயக்குனர் லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தின் டிரைலரை பார்த்த ரஜினிக்கு கண்டிப்பாக கமலை எப்படி கம்பேக் கொண்டு வருகிறாரோ அதேபோல தன்னையும் ஒரு கம்பேக் கொண்டு வருவார் என்ற எண்ணத்தில் ரஜினி தற்போது தன்னுடைய அடுத்த திரைப்படங்களில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிப்பார் என்று உறுதியாக உள்ளார்.

இதனிடையே லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின் கண்டிப்பாக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்க என்ற திரை வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் மாதம் மூன்றாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.