பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்திற்கு தலைப்பு கிடைக்கவில்லை என்றால் பழைய படத்திலிருந்து ஒரு தலைப்பை பயன்படுத்திக் கொள்வார்கள். அதுவும் சம்பந்தப்பட்டவர்களிடம் முறையான அனுமதி பெற வேண்டும். இல்லை என்றால் அதுவே பெரிய பிரச்சினையாக மாறி பட வெளியீட்டிற்கு சிக்கலை ஏற்படுத்தும்.
ஒரு சிலர் பழைய பட தலைப்புகளை கொஞ்சம் உல்டாவாக மாற்றி விடுவார்கள். உதாரணத்திற்கு எங்க வீட்டுப் பிள்ளை என்ற தலைப்பு, நம்ம வீட்டு பிள்ளையாக மாறியது. காவல்காரன் என்ற படத்தலைப்பு காவலன் என்றும், நேற்று இன்று நாளை என்ற படம் இன்று நேற்று நாளை என்றும் மாற்றி வைக்கப்பட்டது.
அதிலும் ஒருசிலர் ரஜினியின் பட தலைப்பை பயன்படுத்துவதற்கு ரொம்பவும் தயங்குவார்கள். ஏனென்றால் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்த அந்த பட தலைப்பை தங்கள் படத்திற்கு வைத்து ஒரு வேளை படம் தோல்வி அடைந்துவிட்டால் பல விமர்சனங்களைச் சந்திக்க வேண்டும் என்பதுதான் காரணம்.
ஆனால் ரஜினியின் பட தலைப்பை பயன்படுத்திக் கொள்ள கூடிய ஏகபோக உரிமையை பெற்ற ஒரே நடிகர் என்றால் அது தனுஷ் மட்டும்தான். அவர் இதற்கு முன்னதாக ரஜினியின் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற மாப்பிள்ளை, பொல்லாதவன், படிக்காதவன் போன்ற படங்களின் பெயர்களை அப்படியே தன்னுடைய படத்திற்கு பயன்படுத்திக் கொண்டார்.
இதற்காக அவர் இதுவரை எந்த ஒரு விமர்சனத்தையும் சந்தித்தது கிடையாது. ஏனென்றால் ரஜினியின் மருமகன் என்ற அந்தஸ்து தான் முக்கிய காரணமாக இருந்தது. அதனால்தான் அவருக்கு ரஜினி படத்தின் தலைப்பை அப்படியே பயன்படுத்திக் கொள்ளும் உரிமை கிடைத்தது.
இதன் காரணமாகவே பல நடிகர்களும் இவரை சற்று பொறாமை தான் பார்த்தார்கள். அந்த அளவுக்கு புகழ் வெளிச்சத்தில் இருந்த நடிகர் தனுஷ் தற்போது பல தோல்வி படங்களை கொடுத்து சறுக்கலை சந்தித்து வருகிறார்.
சமீபகாலமாக தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் அவருக்கு கைகொடுக்கவில்லை. சில வருடங்களுக்கு முன்பு அவர் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டடித்த அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.
அது மட்டுமல்லாமல் ஏராளமான விருதுகளையும் இந்த படத்தின் மூலம் தனுஷ் வாங்கி குவித்தார். அதன்பிறகு அப்படி ஒரு வெற்றி அவருக்கு இதுவரை கிடைக்கவில்லை. அவர் எப்படியாவது ஒரு வெற்றியை கொடுத்துவிட வேண்டும் என்று தற்போது நடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்த முயற்சியாவது அவருக்கு வெற்றியை கொடுக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.