பப்ளிசிட்டிக்காக பண்ற வேலை.. கமல் காரெல்லாம் கொடுக்கல ஷர்மிளா தந்தை

Actor Kamal: சமீபத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய விஷயம் தான் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளாவின் பணிநீக்கம். கடந்த சில மாதங்களாகவே யூடியூப்பில் ஷர்மிளா ட்ரெண்டாகிக் கொண்டிருந்தார். அதாவது இளம் பெண்ணான ஷர்மிளா தனியார் பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.

பொதுவாக பெண்கள் ஓட்டுனராக இருக்கும்போது பல்வேறு சிக்கலை சந்திக்க கூடும். ஆனாலும் மன தைரியத்துடன் ஷர்மிளா இவ்வாறு ஓட்டுநர் பணியை மேற்கொண்டு வருவதால் பல அரசியல் தலைவர்கள் நேரில் சென்று அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் எம்பி கனிமொழி சமீபத்தில் ஷர்மிளாவை சந்தித்தார்.

அவர் சென்ற பிறகு ஷர்மிளா மற்றும் பயணச்சீட்டு கொடுப்பவர் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்து உரிமையாளர் ஷர்மிளாவை பணிநீக்கம் செய்துள்ளார். இந்த விஷயம் இணையத்தில் காட்டுத் தீயாய் பரவியதால் ஷர்மிளா ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனார்.

அதன் பிறகு எல்லோருடைய கவனமும் ஷர்மிளா மீது பட்டது. இந்நிலையில் உலக நாயகன் கமலஹாசன் ஷர்மிளாவை நேரில் சந்தித்து கார் வாங்குவதற்கான காசோலை வழங்கினார். மேலும் சமூக வலைத்தளங்களில் கமல் 12 லட்சம் மதிப்புள்ள காரை ஷர்மிளாவுக்கு வழங்கி உள்ளதாக தகவல் வெளியானது.

மேலும் பேருந்து ஓட்டுனராக இருந்த ஷர்மிளாவை காரின் உரிமையாளராக கமல் மாற்றி உள்ளார் என பலரும் கூறி வந்தனர். இந்நிலையில் யூட்யூப் சேனல் ஒன்றில் பேசிய ஷர்மிளாவின் தந்தை இதெல்லாம் பப்ளிசிட்டிக்காக பரவி வரும் செய்தி. கமல் காரெல்லாம் கொடுக்கவில்லை என பரபரப்பை கிளப்பி உள்ளார்.

அதாவது மூன்று லட்சம் தொகையை மட்டும் கமல் கொடுத்துள்ளாராம். இதை அட்வான்ஸ் தொகையாக கொடுத்து காரை ஷர்மிளா வாங்கிக் கொள்ள வேண்டுமாம். மத்தபடி முழு தொகையும் கமல் கொடுக்கவில்லை என ஷர்மிளா தந்தை கூறியிருக்கிறார். இதை அறிந்த ரசிகர்கள் கமல் பிள்ளையார் சுழி தான் போட்டு தருவார், அதை வைத்து திறமையால் தான் ஷர்மிளா முன்னேற வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.