சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

ப்ரமோஷனுக்கு வரணும்னா 3 லட்சம் வெட்டுங்க.. நயன்தாராவை மிஞ்சி சீன் போடும் அல்டாப்பு சுந்தரி

Nayanthara: கோடிக்கணக்கில் செலவு செய்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் போட்ட காசை எடுப்பதற்குள் விழி பிதுங்கி போகிறார்கள். ஆனால் படத்தில் நடிப்பவர்களோ அதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் பிரமோஷனுக்கு வரமாட்டேன் என ஏகப்பட்ட கண்டிஷன் போடுகின்றனர்.

இதில் நயன்தாரா கடந்த சில வருடங்களாகவே எந்த பட ப்ரமோஷனுக்கும் வருவது கிடையாது. படத்தில் நடிப்பதோடு அவருடைய வேலை முடிந்து விட்டது. இசை வெளியீட்டு விழா போன்ற எந்த நிகழ்வுக்கும் அவர் வரமாட்டேன் என கண்டிஷன் போட்டு தான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் போடுகிறார்.

இது பெரும் சர்ச்சையான நிலையில் இப்போது நயன்தாரா கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய கொள்கையை மாற்றிக் கொண்டு வருகிறார். ஆனால் இவரையே மிஞ்சும் அளவுக்கு 4 படத்தில் நடித்த நடிகை ஒருவர் அலட்டல் காட்டி வருகிறார்.

இதை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆவேசத்துடன் ஒரு மேடையில் கூறியுள்ளார். அதாவது புதுமுக இயக்குனர் ஸ்ரீ வெற்றி இயக்கத்தில் உருவாகி இருக்கும் நாற்கரப்போர் படத்தில் அபர்ணதி ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

பிரமோஷனுக்கு வர மறுத்த அபர்ணதி

அதில் கலந்து கொண்ட சுரேஷ் காமாட்சி, இந்த விழாவுக்கு வர சொல்லி அபர்னதியிடம் கேட்டோம். ஆனால் அவர் பிரமோஷனுக்கு வரவேண்டும் என்றால் மூன்று லட்சம் வேண்டும் என கேட்டார். அது மட்டுமல்லாமல் மேடையில் அவர் பக்கத்தில் யார் உட்கார வேண்டும் என்பதையும் ஒரு கண்டிஷன் ஆக சொல்லி இருக்கிறார்.

இத்தனைக்கும் அந்த நடிகை, நடிகர் சங்கத்தில் உறுப்பினர் கூட கிடையாது. ஆனால் இந்த அளவுக்கு பந்தா காட்டுகிறார். இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்திடம் கூட புகார் கொடுத்தோம். ஆனால் அந்த விசாரணைக்கும் அவர் வரவில்லை.

அதன் பிறகு சில நாட்கள் கழித்து பட விழாவுக்கு வருகிறேன் எனக்கூறி பேசியதற்கு மன்னிப்பும் கேட்டிருக்கிறார். ஆனாலும் நேற்று நடைபெற்ற ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் அவர் வரவில்லை. நான் ஊரில் இல்லை என இயக்குனரிடம் கூறிவிட்டாராம்.

இதைப் பற்றி கோபமாக மேடையில் கூறிய சுரேஷ் காமாட்சி இப்படிப்பட்ட நடிகைகள் தமிழ் சினிமாவுக்கு தேவையே இல்லை. அவர் வெளியூரிலேயே இருக்கட்டும் என டென்ஷனாக பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் இந்த நடிகையின் பெயர் கூட பாதி பேருக்கு தெரியாது. இப்படி இருக்கும் போதே இவ்வளவு பந்தா காட்டுபவர் நயன்தாரா ரேஞ்சுக்கு இருந்தால் என்னென்ன செய்வாரோ என நெட்டிசன்கள் அவரை ரோஸ்ட் செய்து வருகின்றனர்.

நயன்தாராவை ஓவர்டேக் செய்து பந்தா காட்டும் நடிகை

Trending News