டாட்டா நிறுவனத்தின் பிரபல டிடிஎச் சேவையை வாங்க ஏர்டெல் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகிறது. இந்தியாவின் முன்னணி நிறுவனம் டாட்டா. இந்த நிறுவனம் பல்வேறு தொழில்துறைகளில் கால்பதித்திருந்த நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு செயற்கைக்கோள் வழி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கான டிடிஎச் சேவையை டாட்டா பிளே என்ற பெயரில் அறிமுகம் செய்தது.
அதன்படி, கட்டண தொலைக்காட்சி, பார்வைக்குப் பணம் செலுத்துதல், ஸ்டீமிங் தொலைக்காட்சி ஆகியவை செயற்கை கோள் நேரடியாக மக்களின் வீடுகளுக்கு தொலைக்காட்சி சேவை வழங்கப்பட்டது. டாட்டா பிளே குறுகிய காலத்தில் மக்களிடம் சென்றடைந்தது. இதற்கு அந்த நிறுவனத்தின் சேவை மற்றும் விளம்பரமும் ஒரு காரணமாக அமைந்தன. பிரபல சினிமா பிரபங்களும் இதில் நடித்து அம்சாசிட்டாக இந்த பிராண்டை புரமோட் செய்தனர்.
இதில் தற்போது 630 சேனல்களும், 543 எஸ்டி சேனல்கள், 91 ஹெச்.டி சேனல்கள் உள்ளிட்டவற்றை வழங்குகிறது. இந்தியாவில் இந்த டாட்டா பிளே டிடிஎச் சேவையை பயன்படுத்தி 21.3 மில்லியன் பேர் சந்தாதாரர்களாக உள்ளனர். இது இந்தியாவின் உள்ள மொத்த பயனர்களில் 32.65 சதவீதம் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது டாட்டா பிளே நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால் அதை பிரபல ஏர்டெல் நிறுவனம் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே டிடிஎச் சேவை, மொபைல் நெட்வொர்க் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வரும் நிலையில் ஏற்கனவே பல கோடி பேர் சந்தாரர்களாக உள்ள டாடா பிளேவையும் கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
அதன் மூலம் ஏர்டெல்லின் டிஜிட்டல் டிவி சேவையை மேலும் பலப்படுத்தும் என தெரிகிறது. இது தற்போது வளர்ந்துள்ள ஓடிடி சேவைகளினால் அதிகரித்துள்ள போட்டியைச் சமாளிக்கும் வகையில் இம்முடிவை ஏர்டெல் நிறுவன எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இவ்விரு நிறுவனங்களும் இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
கடந்த 2017 அம் ஆண்டு டாட்டாவின் கன்ஸ்யூமர் மொபிலிட்டி வணிகத்தை பார்தி ஏர்டெல் நிறுவனம் கையப்படுத்திய நிலையில், தற்போது டிஜிட்டல் சேவையில் இன்னும் வலுப்படுத்தும் நோக்கில், டாட்டா பிளே டிடிஎச் நிறுவனத்தைக் கையகப்படுத்தும் பேச்சுவார்த்தைடில் இறங்கியுள்ளது. ஒருவேளை இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக ஒப்பந்தம் ஆனால், ஏர்டெல் டிடிஎச் சேனலில் அதிக சந்தாதார்களைக் கொண்ட நிறுவனமாக மாறுமா? என்பது போகப்பொக தெரியும்.