வெள்ளிக்கிழமை, மார்ச் 14, 2025

மீனா விரித்த வலையில் அப்பட்டமாக சிக்கிய சிந்தாமணி.. விஜயா மூஞ்சில் கரியை பூசிய மருமகள்கள், சுருதி செய்த சம்பவம்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், நம்மளை ஏமாற்றுபவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றால் நாம் அவர்கள் வழியில் போய் தான் காரியத்தை சாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார் மீனா. அந்த வகையில் வைரத்தை வைரத்தால் மட்டும்தான் அறுக்க முடியும் என்பதற்கு ஏற்ப மீனா சீதா மற்றும் சுருதி கூட்டணி போட்டு விட்டார்கள்.

அதாவது மீனா, சீதாவை வைத்து சிந்தாமணிக்கு போன் பண்ணி மண்டபத்திற்கு டெக்ரேசன் பண்ணுவதற்கு ஒரு ஆர்டர் வந்தது போல் பேச வைத்து விட்டார். இதை சீதா போனில் ரெக்கார்ட் பண்ணி வைத்து விட்டார். இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஸ்ருதி உடைய ஆபீஸ்க்கு போய் விட்டார்கள். அங்கே மீனா ஏமாந்த விஷயத்தை சுருதியிடம் சொல்கிறார்.

உடனே கோபப்பட்டு கொந்தளித்த சுருதி நேரடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் கம்பளைண்ட் கொடுக்கலாம் என கூப்பிடுகிறார். அதற்கு மீனா நான் விசாரித்துவிட்டேன், நான் கையெழுத்து போட்ட பத்திரம் இருப்பதால் கேஸ் போட்டாலும் பிரயோஜனம் இல்லை. ஆனாலும் அதற்காக இதை அப்படியே விட்டு விட முடியாது. அதற்காக நான் வேற ஒரு ஐடியா வைத்திருக்கிறேன் என்று சொல்கிறார்.

அதன்படி சீதா, சிந்தாமணி இடம் பேசிய போது ரெக்கார்ட் பண்ணியதை சுறுதியிடம் போட்டு காட்டுகிறார். அந்த வகையில் சிந்தாமணியின் குரலை சுருதி புரிந்துகொண்டு மண்டபத்தின் மேனேஜருக்கு சிந்தாமணி போல் சுருதி போன் பேசுகிறார். அப்படி பேசும் பொழுது பணத்தை எடுத்துட்டு கல்யாண மண்டபத்திற்கு ஒரு மணி நேரத்தில் வந்துவிடு. அங்கே வந்து உன்னிடம் பணத்தை வாங்கிவிட்டு கமிஷன் பணத்தையும் கொடுத்து விடுகிறேன் என்று சுருதி, சிந்தாமணி குரலில் பேசி விடுகிறார்.

உடனே மீனா மற்றும் சீதா கோவிலுக்கு போய் விடுகிறார்கள். அப்படி போகும் பொழுது மீனா, மண்டபத்தின் ஓனருக்கு போன் பண்ணி அதே கோவிலுக்கு வர சொல்கிறார். ஆக மொத்தத்தில் கோவிலுக்குள் வந்த சீதா மற்றும் மீனா மறைந்து இருந்து வேடிக்கை பார்க்கிறார்கள். அங்கே சிந்தாமணி புதுசாக எடுக்கப்போகும் ஆடர் விஷயமாக பேசுவதற்கு வருகிறார். சிந்தாமணி குரலில் சுருதி போன் பண்ணி மண்டபத்தின் மேனேஜரையும் வர சொல்லி இருக்கிறார்.

அப்படி வந்த பொழுது சிந்தாமணி மற்றும் மேனேஜர் பார்த்து பேசி கொள்கிறார்கள். உடனே சிந்தாமணி அந்த மீனா வந்தாளா, அதன்பிறகு ஏதாவது பிரச்சனை பண்ணினாளா, என்று கேட்கிறார். அதற்கு அந்த மேனேஜர் எல்லா விஷயத்தையும் நான் போனில் இப்பதான சொன்னேன். நீங்க அதற்கு கோவிலுக்கு பணத்தை எடுத்துட்டு வா என்று சொன்னீர்கள் தானே என்று கேட்கிறார். அதற்கு சிந்தாமணி நான் உனக்கு போன் பண்ணவே இல்லையே என்று சொல்கிறார்.

அப்பொழுது மீனா எல்லாத்தையும் நான் சொல்கிறேன் என்று எடுத்து சொல்லிய பொழுது இவர்கள் இரண்டு பேருடைய சதி வேலைகள் எல்லாம் மண்டபத்தின் ஓனருக்கும் தெரிய வந்துவிட்டது. உடனே மேனேஜர் கன்னத்தில் பளார் என்று ஓனர் அறைந்து சிந்தாமணியும் திட்டி இனி மண்டபத்தின் ஆடர் உனக்கு கிடையாது என்று சொல்லி மீனாவிற்கு தருகிறேன் என்று வாக்கு கொடுத்து விட்டார்.

எது எப்படியோ மீனா விரித்த வலையில் அப்பட்டமாக சிந்தாமணி சிக்கிக் கொண்டார். இதனை அடுத்து வீட்டுக்கு வந்த முத்துவிற்கு நடந்த விஷயத்தை மீனா சொல்கிறார். உடனே முத்து என் பொண்டாட்டி எவ்வளவு பெரிய சாதனை பண்ணி இருக்கிறார் என்று குடும்பத்தில் இருப்பவர்களிடம் சொல்கிறார்.

அப்பொழுது அண்ணாமலை என்ன ஆச்சு என்று கேட்ட நிலையில் நடந்த விஷயத்தை சொல்கிறார்கள். உடனே முத்து, மீனா பிசினஸை காலி பண்ண வேண்டும் என்று வெளியில் மட்டுமில்லாமல் நம் வீட்டிற்குள்ளேயும் சதி நடக்கிறது என்று சொல்லி விஜயா மூஞ்சில் கரியை பூசி விட்டார்கள். அந்த வகையில் இனி மீனாவுக்கு விடிவுகாலம் பிறந்து விட்டது என்பதற்கு ஏற்ப பிசினஸில் வளர்ந்து ஜெயித்து காட்டப் போகிறார்.

Trending News