திங்கட்கிழமை, மார்ச் 17, 2025

மனோஜ் மீது வெறிகொண்ட கோபத்துடன் கத்தியை காட்டிய முத்து.. சுருதி செய்த சம்பவம், உண்மையை கேட்கும் மீனா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து வீட்டிற்கு அவருடைய நண்பர் செல்வம் மற்றும் மனைவி வருகிறார்கள். வந்ததும் கோவில் பிரசாதத்தை கொடுக்கிறார்கள் அப்பொழுது முத்து அவங்களை சாப்பிட்டு போக சொல்லி வற்புறுத்துகிறார். உடனே அவங்க இரண்டு பேரும் சாப்பிட தயாராகி விட்டார்கள். அந்த நேரத்தில் மீனா அவர்களுக்கு தேவையான சாப்பாடு செய்து கொண்டிருக்கிறார்.

அத்துடன் முத்துவின் நண்பர் செல்வம் மற்றும் செல்வத்தின் மனைவி இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது மனோஜ் ஆபீசுக்கு கிளம்பிவிட்டார் என்று சாப்பாடு கேட்டு ரோகினி, மீனாவிடம் கேட்கிறார். அதற்கு மீனா, நீங்க முன்னாடியே சொல்லி இருக்கக் கூடாதா, உங்க வீட்டுக்காரர் ஆஃபீஸ்க்கு போக நேராகும் என்று நான் அவங்களுக்கு தான் ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறார்.

அதனால் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க நான் அதற்குள் அவர்களுக்கு சாப்பாடு கொடுத்து விடுவேன் என்று சொல்லியதால் ரோகிணி அதை அப்படியே போய் மனோஜிடம் சொல்கிறார். உடனே மனோஜ், கண்டவங்களா வந்து சாப்பிடும் வரை நான் ஏன் வெயிட் பண்ணனும். எனக்கு ஆபீஸ்க்கு நேரம் ஆகிவிட்டது, முதலில் நான் சாப்பிடணும் அதற்குப் பிறகுதான் மற்றவர்கள் எல்லாம் என்று கத்த ஆரம்பித்து விட்டார்.

மனோஜ் கத்தியை கேட்டதும் முத்து, மனோஜிடம் கத்தாதே வெளியே அவர்களுக்கு கேட்கபோது என்று அமைதியாக பேச சொல்லி கெஞ்சுகிறார். ஆனால் மனோஜ் நிதானம் இல்லாமல் வார்த்தையை வெளியிட்டதால் முத்துவின் நண்பர் மற்றும் மனைவி சாப்பிடாமலே பாதையில் எழுந்து போய் விட்டார்கள்.

இதையெல்லாம் பார்த்த ரவி மற்றும் சுருதி, ஏன் இந்த மனோஜ் இப்படியெல்லாம் பண்ணுகிறான் என்று புலம்புகிறார்கள். அத்துடன் அவங்க போயிட்டாங்க என்று தெரிந்ததும் கோவப்பட்ட முத்து, மனோஜை உட்கார வைத்து சாப்பாட்டை வாயில் திணிக்கிறார். இதை பார்த்த ரோகினி கோபப்படுகிறார்.

அப்பொழுது மனோஜ் சொல்லியது என்னவென்றால் என்னை எப்படியாவது கொள்ள வேண்டும் அதற்கு தானே வழி பண்ணுகிறாய். உனக்கு ஒன்னும் ஜெயிலுக்கு போகிறது புதுசிலேயே என்று வார்த்தையை விடுகிறார். உடனே கோபத்துடன் முத்து அங்கு இருக்கும் கத்தியை எடுத்து மனோஜை குத்துவதற்கு ஓடுகிறார். மனோஜ் பயந்து ஓடிய நிலையில் வீட்டிற்குள் ஒரு கலவரம் ஆகிவிட்டது.

அந்த நேரத்தில் சுருதி அம்மா வந்து விடுகிறார். வந்ததும் இது என்ன குடும்பமா என்னது, என் பொண்ணு எப்படி இங்கே நம்பி விடுவேன். இவ்ளோ பெரிய ரவுடியா இருக்கானே என்று முத்துவை பார்த்து திட்டுகிறார். உடனே ஸ்ருதி அவங்க அம்மாவை திட்டி வெளியே அனுப்பி விடுகிறார். அத்துடன் சுருதி, சரியான முடிவு சொல்லும் விதமாக இரண்டு பேருமே தவறு பண்ணியிருக்கீங்க. முத்து கத்தியை தூக்கினதும் தப்புதான், சாப்பிட உட்கார்ந்து அவர்களை திட்டியதும் தப்புதான் அதனால் ரெண்டு பேரும் மன்னிப்பு கேளுங்கள் என்று சொல்கிறார்.

உடனே மனோஜ் மற்றும் முத்து ஒருவரே ஒருவர் மன்னிப்பு கேட்டு விடுகிறார்கள். மேலும் இந்த சண்டையை மறக்கடிக்கும் விதமாக சுருதி ஒரு விளையாட்டு சொல்கிறார். அந்த விளையாட்டை முத்து மனோஜ் ரவி மீனா ரோகினி ஸ்ருதி அனைவரும் சேர்ந்து விளையாடி சந்தோஷமாகி விடுகிறார்கள். இதற்கிடையில் மனோஜ் சொன்னதை நினைத்து முத்துவிடம் மீனா கேட்கிறார்.

அதாவது உங்க அண்ணன் நீங்கள் ஜெயிலுக்கு போனவர் என்று சொன்னார். நீங்கள் ஏன் போனீங்க என்று கேட்கிறார். அதற்கு முத்து யோசித்த நிலையில் மீனா உண்மையை சொல்லுங்க என்று கேட்கிறார். ஆனால் முத்து எந்த உண்மையையும் சொல்லாமல் நான் அடிக்கடி சின்ன சின்ன பஞ்சாயத்துக்காக போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு வருகிறேன். அதை தான் அவன் சொல்கிறான் என்று சமாளித்து விடுகிறார்.

Trending News