புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

தற்கொலைக்கு தூண்டும் பிரபல சீரியல்.. டிஆர்பி-யை ஏத்த இதெல்லாம் ஒரு பொழப்பா!

இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை சின்னத்திரையில் நாள்தோறும் ஒளிபரப்பாகும் சீரியல்களை விரும்பி பார்க்கின்றனர். அவற்றையெல்லாம் பார்த்தால் தைரியம் வர வேண்டுமே தவிர, கோழைத்தனத்தை அதிகரிக்கக் கூடாது என டிஆர்பி-யில் டாப் லிஸ்டில் இருக்கும் சன் டிவி சீரியலை நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் வறுத்தெடுக்கின்றனர்.

சன் டிவியில் இயக்குனர் திருச்செல்வம் இயக்கியிருந்த ‘கோலங்கள்’ சீரியல் சூப்பர் ஹிட்டானது. இவர் மீண்டும் நீண்ட நாட்களுக்கு பிறகு சன் டிவியில் சமீபத்தில் தொடங்கிய எதிர்நீச்சல் சீரியலை இயக்கியதன் மூலம் கம்பேக்  கொடுத்திருக்கிறார். இந்த சீரியல் பெண் ஆளுமையை பறைசாற்றும் வகையில் இருப்பதால் வெகு சீக்கிரமே சின்னத் திரை ரசிகர்களின் மனதைக் கவர்ந்தது.

Also Read: மீண்டும் சீரியலில் நடிக்கப் வரும் ஆலியா.. இந்த வாட்டி விஜய் டிவிக்கு ஆப்பு

இந்த சீரியல் தமிழில் மட்டுமல்ல தெலுங்கில் ‘உப்பென்னா’, மலையாளத்தில் ‘கனல் பூவு’ என்ற தலைப்பில் ரீமிக்ஸ் செய்யப்பட்டு ஒளிபரப்பாகிறது. இதுதான் கயல் சீரியலுக்கு அடுத்தபடியாக அதிகம் மொழிகளில் ரீமேக்காகும் சீரியல் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது.

இப்படிப்பட்ட சீரியலில் ரேணுகா தனது அம்மாவையும் தற்கொலை செய்யச் சொல்லி, தானும் தற்கொலை செய்து கொள்வதுதான் பிரச்சினைக்கு எல்லாம் தீர்வு என பேசி ரசிகர்கள் பலருக்கு வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

சில பெண்கள் சீரியல்களில் மூழ்கி கிடப்பதால் சீரியலை பார்த்தால் குடும்பத்திற்கு நல்லது கிடையாது என பல ஆண்களுடைய வாதமாக இருக்கும் நிலையில், தற்போது சன் டிவியின் கையில் சீரியலில் இப்படி ஒரு காட்சிகளை வைத்து அதிர்ச்சியடைய செய்துள்ளனர்.

Also Read: டிஆர்பி-யில் தூள் கிளப்பும் சன் டிவி.. டாப் 5லிருந்து துரத்தப்பட்ட விஜய் டிவி சீரியல்கள்

ரேணுகா இந்த சீரியலில் அழுதபடி பலமுறை பிரச்சனைக்கு தீர்வு சாவுதான் என்று மீண்டும் மீண்டும் சொல்லி சீரியலை பார்க்கும் ரசிகர்களுக்கும் அந்த உணர்வை மனதில் பதிய வைப்பது போல் இருந்தது. தற்போது உள்ள சூழ்நிலையில் அதிக அளவில் தற்கொலை செய்யும் நாடுகளில் தமிழ்நாடு 2ம் இடத்தை பிடித்திருப்பதாக சமீபத்தில் கருத்துக்கணிப்பு வெளியானது.

இந்த நிலையில் சீரியலிலும் இதையே திரும்பத் திரும்ப சொன்னதால் வீட்டில் இதைப் பார்க்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கை குறைந்து, பிரச்சினையை சமாளிப்பதற்கு ஒரே வழி தற்கொலைதான் என்ற எண்ணமும் தோன்றிவிடும் என பலரும் இந்த சீரியலுக்கு எதிராக கண்டனங்களைத் தெரிவிக்கின்றனர்.

Also Read: டைட்டில் வின்னரை விரட்டியடித்த விஜய் டிவி.. ஆதரவோடு அனைத்து கொண்ட சன் டிவி

சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றுவதற்காக, கொஞ்சம் கூட சமூக அக்கறை இல்லாமல் இப்படியெல்லாம் அனுதாபம் தேடி ரசிகர்களை தற்கொலைக்குத் தூண்டுவதெல்லாம் ஒரு பொழப்பா! என்றும் நெட்டிசன்கள் கிழித்து தொங்க விடுகின்றனர்.

Trending News