திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நாலு கெட்டபில் மிரட்ட வரும் ரங்கராய நாயக்கன்.. மணிரத்தினத்தை நிம்மதி பெருமூச்சு விட வைத்த கமல்

Actor Kamal and maniratnam combo thug life movie update: “விழுவதென்றால் கொஞ்சம் விழுவேன் எனது எதிரிகள் சுகம் காண!” என்று சற்று பின்தங்கி இருந்த உலக நாயகன் கமலஹாசன் விக்ரம் படத்தின் மூலம் மலைபோல் எழுந்தார். விக்ரம் தந்த வெற்றியால் அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகி தன்னை மீண்டும் ஒரு சகலகலா வல்லவன் என்று நிரூபித்து உள்ளார்.

விக்ரமுக்கு பின் அஜித்தின் துணிவு இயக்குனர் ஹச் வினோத் அவர்களுடன் KH233 இல் இணைவதாக இருந்தது. பின்பு மணிரத்தினிடம் கதை கேட்ட கமல் அவர்கள்,அந்த கதையில் இம்ப்ரஸ் ஆகி மணிரத்தினத்திற்கு கால் சீட் கொடுத்து ஹச் வினோத்தை டீலில் விட்டார்.

இறுதியாக மணிரத்தினத்துடன் தக் ஃலைப் உறுதியானது. நாயகன் கதையை நினைவுபடுத்தும் வகையாக கெட்டபில் பின்னி இருந்து “என் பேரு ரங்க ராயர் சக்திவேல் நாயக்கன்! காயல்பட்டினகாரன்” என்று நாயகன் ஸ்டைலில் பிரமோவை வெளியிட்டு  இருந்தார் கமல்.

Also read: மகா கலைஞன் என நிரூபித்த கமல்.. இறந்த நண்பருக்காக உலகநாயகன் செய்யும் தரமான சம்பவம்

ப்ரமோ வந்ததிலிருந்து படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்காக கூடியது. மேலும் தக் ஃலைப் படத்திற்காக கமலுடன் திரிஷா, ஜெயம் ரவி, கௌதம் கார்த்திக் என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். கடந்த ஆண்டு ஏற்பட்ட இடைவெளியை சரி செய்யும் வண்ணம் இந்த ஆண்டு இந்தியன் 2, 3 மற்றும் தக் ஃலைப்பையும் வெளியிட முடிவு செய்துள்ளார் கமல்.

சமீபத்தில் இப்படத்திற்கான படப்பிடிப்பு  சென்னையில் இனிதே ஆரம்பிக்கப்பட்டது. நாலு வேடங்களில் நடிக்க உள்ளாராம் கமல். இப்போது உள்ள தகவலின் படி முரட்டுதாடி மீசை என முரட்டுத்தனமான தோற்றத்துடன் உள்ள கதாபாத்திரம் மட்டுமே வெளிவந்து உள்ளது.

ஏன் இந்த தாமதம்? என்று கேட்டதற்கு பிக் பாஸ் ஷோ வில் கலந்து இருந்ததால் கெட்டப்பை மாற்ற முடியவில்லை என்றும் இப்போது அந்த நிகழ்ச்சி முடிவுற்றதால்  கெட்டப்  மாற்றத்திற்கு கமல் ஓகே சொல்லியதாக கூறப்படுகிறது. உலக நாயகனுக்கு கெட்டப்ப மாற்றுவதற்கும்! செட்டப்ப மாற்றுவதற்கும், சொல்லியா கொடுக்க வேண்டும்.?

35 வருடங்களுக்கு பின்னான இணைவு என்பதால் நாயகனை விட பல மடங்கு எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது மணிரத்தினத்தின் தக் ஃலைப்.

Also read: வினோத்துடன் ஆன கூட்டணியை முறித்துக் கொண்ட கமல்.. மணிரத்தினத்தால் ஏற்பட்ட விளைவு

Trending News