செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

எவ்வளவு அடி வாங்கினாலும் நான் ஹீரோதான்.. வயிற்றெரிச்சலை கிளப்பி வெறுப்பை சம்பாதிக்கும் சந்தானம்!

மக்களால் கவுண்டமணிக்கு பிறகு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நகைச்சுவை நடிகர் என்றால் சந்தானம் தான். சந்தானத்தின் டைமிங் காமெடியை ஈடு செய்யும் அளவிற்கு இன்னும் எந்த காமெடியனும் வரவில்லை. ஆனால் சந்தானத்திற்கு மக்கள் தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று இன்னும் தெரியவில்லை.

ஹீரோக்களிடம் அடிவாங்கி, கலாய் வாங்கி கொண்டிருக்கும் காமெடியன்களுக்கு நடுவே சந்தானம் ஹீரோக்களையே கலாய்த்து தள்ளுவார். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆர்யா, ஜீவா, உதயநிதி ஸ்டாலின் படங்களில் சந்தானம் தான் பர்ஸ்ட் ஹீரோ என்பது போல தான் இருக்கும்.

Also Read: சூர்யா மீது கொலவெறியில் இருக்கும் சந்தானம்.. மனுஷன் இன்னும் பழச மறக்கல

ஆனால் சந்தானத்திற்கு திடீர் விபரீத ஆசையாக ஹீரோ வாக நடிக்க தொடங்கினார். காமெடியான கதைகளில் முதல் இரண்டு திரைப்படங்களில் நடித்தார். அது ஓரளவுக்கு வெற்றி தந்தது. அதனை தொடர்ந்து உடல் எடையை குறைத்து மாஸ் ஹீரோவாக மாற முயற்சி செய்கிறார். இது சந்தானத்திற்கு செட் ஆகவில்லை.

சமீபத்தில் வெளியான அவருடைய படங்கள் எல்லாம் பிளாப் ஆகிவிட்டது. ‘குளு குளு ‘ திரைப்படத்தை ரசிகர்கள் காமெடி படம் என நினைத்து பெரிதும் எதிர் பார்த்தார்கள், அதிலும் சீரியஸ் , செண்டிமெண்ட் என சொதப்பி வைத்து விட்டார் சந்தானம். காமெடியாக நடிப்பவர்கள் ஹீரோ ஆக கூடாது என ஏதும் இல்லை ஆனால் ரசிகர்கள் மனதறிந்து படம் பண்ணினால் தான் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும்.

Also Read: பெரிய ஆஃபர் கொடுத்தும் மதிக்காத சந்தானம்.. தூது புறாவாய் சென்ற ஆர்யா!

நாகேஷ், கவுண்டமணி, வடிவேலு, விவேக் எல்லாம் ஹீரோவாக நடித்தார்கள் தான், கிடைத்த படத்தில் நடித்து விட்டு தங்களுடைய பழைய காமெடி பாணிக்கே திரும்பி விட்டார்கள் . ஆனால் சந்தானம் மட்டும் ஏனோ நடித்தால் ஹீரோ தான் என்று வம்படியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவரை ஹீரோவாக ரசிகர்களே விரும்பாத போது யாருக்காக நடிக்கிறார் என்று தெரியவில்லை.

‘லொள்ளு சபா’ டைமிங் காமெடியின் மூலம் வெள்ளித்திரைக்கு வந்த சந்தானம், இன்று காமெடியை ஒதுக்கி கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் மறைந்து கொண்டிருக்கிறார். இன்றும் அவரை காமெடியனாக பார்க்க ரசிகர்கள் ஏங்கி கொண்டிருக்கிறார்கள். நடிகர்களும், தயாரிப்பாளர்களும் காத்து கொண்டிருக்கிறார்கள். இதை சந்தானம் புரிந்து கொள்ளவில்லை என்றால் விரைவில் கோலிவுட்டில் காணாமல் போனவர்கள் லிஸ்டில் சேர்ந்து விடுவார்.

Also Read: ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்த 5 காமெடி நடிகர்கள்.. சைடு ரோலுக்கு எண்டு கார்டு போட்ட சந்தானம்

Trending News