புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ரஜினியை குருவாக ஏற்று ஆன்மீகவாதிகளாக மாறிய 5 நடிகர்கள்.. தலைவரை மிஞ்சிய தொண்டன்

Superstar Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர். அவர் ஹிமாச்சலத்திற்கு ஆன்மீக பயணம் போவது வாடிக்கையாக கொண்டிருந்தார். சமீபத்தில் 4 வருட இடைவெளிக்கு பிறகு ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்காக இவர் சென்று வந்தார். இவரது ஆன்மீக போதனைகளால் இவரையே ரோல் மாடலாக எடுத்து நடிகர்கள் சிலர் ஆன்மீகவாதிகளாக மாறினார்கள், இவரை குருவாக ஏற்றுக்கொண்டனர். அந்த சிஷ்யர்கள் யார் பார்க்கலாமா!

தனுஷ்: மாமனாரை போன்று அச்சு அசல் ஆன்மீகத்தில் தீவிர நம்பிக்கை உடையவர் தனுஷ். ஆன்மிகம் சார்ந்த போதனைகளை பின்பற்றுவதனால் நல்லது நடக்கிறது என்று இவர் நம்புகிறார். ரஜினியை பார்த்து இவரும் அதிக ஈடுபாடு செலுத்த ஆரம்பித்தார். பின்னர் அவரின் பாதையை பின்தொடர ஆரமித்தார். இவர் வாழ்க்கையில் வெற்றி பெற சில ஆன்மீக மந்திரத்தை பின்பற்றி வருவதாக இவரே சில இடங்களில் கூறியுள்ளார்.

Also Read:பழக்க வழக்கெல்லாம் புறவாசலோட போயிரணும்.. தம்பியை தவிர மற்ற இயக்குனர்களை மதிக்காத விஜய்

சிம்பு: சிலம்பரசனும் ஆன்மீகத்தில் நம்பிக்கை உடையவர். இவர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். சூப்பர் ஸ்டாருடன் பேசிய கொஞ்ச நேரத்திலேயே அவருடைய ஆன்மீக பற்றை கண்டு, ஆன்மீகத்தில் ஈர்க்கப்பட்டு வந்து ஆன்மீகவாதியாக மாறினார். தியானம் செய்ததால் என்னை நான் கண்டுபிடிக்கவும், புதிய பாதையில் நல்வழிப்படுத்தாவும் உதவுகிறது என்றார். ரிஷிகேஷ் ஹரிதுவார்கு ஆன்மீகம் பயணம் மேற்கொள்கிறார்.

சிவகார்த்திகேயன்: சிவகார்த்திகேயன் இயல்பிலேயே ரஜினியின் தீவிர ரசிகர். தலைவருடன் பேசியதிலிருந்து அவருடைய சாந்தமான பேச்சுகள் கண்டு இவருக்கும் ஆன்மீகத்தில் இன்னும் ஆர்வம் அதிகமானது. இதனை பின்பற்றுவதனால் வாழ்வில் நல்ல காரியங்கள் நடக்கிறது என்று இவர் நம்புகிறார்.

Also Read: Tamilkudimagan Movie Review- கனமான கதை களத்துடன் சேரன் நடிப்பில் வெளிவந்த தமிழ் குடிமகன் முழு விமர்சனம்.. சாதி அடக்குமுறை!

சந்தானம்: நகைச்சுவை நடிகரிலிருந்து ஹீரோவாக மாறிய சந்தானமும் இவர்களுள் ஒருவர். இவர் லிங்கா திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்த பிறகு அவருடைய ஆன்மீக செயலை பார்த்து அதில் இருந்து அவருடைய ஆன்மீக பக்தராக மாறினார். இவர் தீவிர சிவன் பக்தர் என இவரே கூறியுள்ளார் .

எஸ்.ஏ.சந்திரசேகர்: எஸ் ஏ சி ஆன்மீகத்தை நம்பும் ஒருவர். அது ரஜினியை சந்தித்த பிறகுதான். நான் சிகப்பு மனிதன் படம் இயக்கும்போது அவருடன் நெருக்கமாகிவிட்டார். பின்னர் அவரைப் பார்த்து இவருக்கும் ஆன்மீகத்தில் ஈடுபாடு வரத் தொடங்கியது. இதற்கு முன்பெல்லாம் அவர் மிகவும் கோபம் உடையவராக இருந்தாராம், ரஜினி கூட பழகியதற்குப் பிறகு அதை எல்லாம் மாற்றி கொண்டார். ரஜினியை பார்க்கும்போது அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் அளவிற்கு ஆன்மீகத்தை நம்பத் தொடங்கி விட்டார்.

Also Read:அப்பவே லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த முத்துவேல் பாண்டியன் மனைவி.. ரகசியம் அம்பலமானதால் நடந்த திருமணம்

ராகவா லாரன்ஸ்: சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகரான லாரன்ஸ் ரஜினியை ரோல் மாடலாக கொண்டவர். தலைவரை மிஞ்சும் அளவிற்கு சிஷ்யன் ஒரு படி மேலே சென்று விட்டார். ராகவேந்திரா சுவாமிக்கு ஆவடி அருகில் கோவிலே கட்டி உள்ளார். பிறகு அந்த கடவுளின் மீது இருக்கும் பக்தியின் காரணத்தால் தனது பெயருக்கு முன்னால் ராகவா என்ற பெயரையும் சேர்த்துக் கொண்டார்.

Trending News