சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் கல்யாணி பிரியதர்ஷன். இவர் இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் பிரபல நடிகை லிசி ஆகியோரின் மகள் ஆவார்.
முதல் படத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவருக்கு ஹீரோ படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வந்த கல்யாணிக்கு மாநாடு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தற்போது மாநாடு திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. இப்படம் வெளியாகி பல நாட்களான பின்னும் தியேட்டரில் கூட்டம் குறையாமல் இருக்கிறது. அந்த அளவுக்கு இப்படம் ரசிகர்களை கவர்ந்து வசூலில் சாதனை புரிந்துள்ளது.
இதனால் இப்படத்தில் நடித்த அனைவருக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இது ஹீரோயின் கல்யாணி பிரியதர்ஷனுக்கும் பொருந்தும். இப்போது அவரைத் தேடி பல வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பதால்கல்யாணி தனக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுது சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்துள்ளார். அவர் முதல் படத்தில் நடிக்கும் போது 75 லட்ச ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.
இப்போது இவர் நடிப்பில் வெளியாகியுள்ள மாநாடு திரைப்படம் வெற்றி பெற்ற காரணத்தால் கல்யாணி தனது சம்பளத்தை ஏற்றியுள்ளார். தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் தனக்கு 2 கோடி சம்பளம் தருமாறு அவர் கேட்டுள்ளார்.
இதைக் கேட்ட இயக்குநர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இரண்டு படங்கள் நடித்ததற்கே இவ்வளவு சம்பளமா என்று அவர்கள் தெறித்து ஓடியுள்ளார்கள். ஒரு படம் வெற்றி அடைந்தால் அந்த படத்தின் ஹீரோயின் கொஞ்சம் பந்தா காட்டுவது வழக்கம் தான். ஆனால் கல்யாணி அவர்களையெல்லாம் மிஞ்சி விடுவார் போல் தெரிகிறது.