திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ரொம்ப ஆசைப்பட்டு அஜித் ரீமேக் செய்ய சொன்ன படம்.. இயக்குனரால் கிடைத்த ஏமாற்றம்

Actor Ajith: பொதுவாக அக்கட தேச மொழியில் ஹிட் அடித்த படங்களை தமிழில் ரீமேக் செய்வார்கள். சமீபகாலமாக தமிழ் படங்களும் அதிக அளவில் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் அஜித் நடித்த வேதாளம் படம் கூட தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டிருந்தது.

சிரஞ்சீவி நடிப்பில் போலா சங்கர் என்ற பெயரில் அந்தப் படம் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவு அந்த படம் போகவில்லை. இந்நிலையில் அஜித் ஒரு படத்தை பெரிதும் ரீமேக் செய்ய ஆசைப்பட்ட போதும் இயக்குனரால் ஏமாற்றம் கிடைத்திருக்கிறது. இந்த விஷயத்தை அந்த இயக்குனரை சமீபத்தில் கூறியிருக்கிறார்.

Also Read : எதிர்நீச்சல் ஈஸ்வரி நடித்த 5 படங்கள்.. அஜித்தை வெறுத்து ஒதுக்கி அவமானப்படுத்திய கனிகா

அதாவது இயக்குனர் சீனு வைட்டலா நடிகர் மகேஷ்பாபுவை சந்திப்பதற்காக பிஸ்னஸ் மேன் படப்பிடிப்பு நடக்கும் சமயத்தில் ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று இருக்கிறார். அப்போது அதே ஹோட்டல் தான் நடிகர் அஜித்தும் தங்கியிருந்தாராம். அந்தச் சமயத்தில் இயக்குனர் சக்ரி டொலெட்டி அஜித்தை சந்திக்க அழைத்துச் சென்றாராம்.

அப்போது அஜித் தான் இயக்கிய படங்களை பற்றி பேசி தன்னை பாராட்டியதாக சீனு வைட்டலா கூறியிருந்தார். அதிலும் குறிப்பாக தூக்கிடு படத்தை பாராட்டி இந்த படம் தமிழில் ரீமேக் செய்தால் நான் நடிக்கிறேன் என்று கூறினாராம். ஆனால் அப்போது ஜூனியர் என்டிஆரின் பாட்ஷா படத்தில் இயக்குனர் ஒப்பந்தமாகி இருந்ததால் அஜித்தின் படத்தை இயக்க முடியவில்லை.

Also Read : மிரட்ட வரும் அஜித்-சஞ்சய் தத் காம்போ.. வைரலாகும் புது போஸ்டர், கிழிய போகும் ஸ்கிரீன்

அஜித் படத்தை தவற விட்டதை எண்ணி வருந்துவதாக இயக்குனர் கூறி இருக்கிறார். இந்நிலையில் அஜித் விருப்பப்பட்டும் இந்த நிகழ்வு நடக்கவில்லை என்றாலும் வரும் காலங்களில் தூக்குடு படம் தமிழில் ரீமேக் செய்தால் கண்டிப்பாக அஜித் நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இப்போது விரைவில் விடாமுயற்சி படம் தொடங்க இருக்கிறது.

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் கண்டிப்பாக தொடங்கும் என்று நம்பப்படுகிறது. ஏற்கனவே நீண்ட காலமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரே கட்டமாக படத்தை எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளார்கள்.

Also Read : புள்ள பூச்சி எல்லாம் அஜித்துக்கு வில்லனா.? மீண்டும் மீண்டும் சொதப்பும் மகிழ் திருமேனி

Trending News