சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

ஜெயம் ரவியின் 100 கோடி வசூல் சாதனை படைத்த படம்.. விரைவில் தொடங்க உள்ள இரண்டாம் பாகம்!

இயக்குனர் மோகன் ராஜா மற்றும் நடிகர் ஜெயம்ரவி ஆகிய இருவரும் சகோதரர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இவர்கள் இருவர் கூட்டணியில் முதன் முதலில் உருவான ஜெயம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானதாலே ரவியை ஜெயம் ரவி என அழைத்து வருகின்றனர்.

இதேபோல் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கடந்த 2015ஆம் ஆண்டு மீண்டும் மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி கூட்டணியில் உருவான படம்தான் தனி ஒருவன். இப்படம் ஜெயம் படத்தை விட இருமடங்கு வெற்றி பெற்றது. ஜெயம் ரவியுடன் நயன்தாரா மற்றும் அரவிந்த் சாமி நடித்திருந்தனர். இப்படத்தில் அரவிந்த்சாமியின் வில்லத்தனம் அனைவரது பாராட்டையும் பெற்றது.

தனி ஒருவன் படம் 100 கோடி வரை வசூல் செய்து சூப்பர் ஹிட்டானதால், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டு அதற்கான கதை எழுதும் பணியையும் மோகன்ராஜா முடித்திருந்தார். ஆனால் அந்த சமயத்தில் ஜெயம் ரவிக்கு பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் இப்படத்தை இயக்க முடியவில்லை.

தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி இப்படத்தை முடித்துவிட்டு இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார். அதேபோல் இயக்குனர் மோகன் ராஜாவும் லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீ மேக்கை நடிகர் சிரஜ்ஜீவியை வைத்து எடுத்து வருகிறார்.

thani-oruvan-2
thani-oruvan-2

எனவே இவர்கள் இருவரும் அவரவர் படங்களை முடித்த பின்னர் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கும் என்று கூறப்படுகிறது. முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Trending News