திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நீ பண்ற ஜல்ஸா வேலைக்கு கேப்டன் பதவி ஒரு கேடு.. நிக்சனுக்கு பிக்பாஸ் வச்ச ஆப்பு

Bigg Boss Season 7: பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த ஏழாவது சீசனில் எலிமினேஷன் ஆகிய இரண்டு பேரை உள்ளே அனுப்பிவிட்டு, உள்ளே இருந்த இரண்டு பேரை டபுள் எவிக்சனில் வெளியே அனுப்பி இருக்கிறார்கள். வைல்ட் கார்டு என்ட்ரி ஆக உள்ளே வந்த ஆர் ஜே ப்ராவோ மற்றும் பல வாரங்களாக தப்பித்து கொண்டிருந்த அக்ஷயா இருவரும் நேற்று வெளியே சென்று இருக்கிறார்கள்.

வைல்ட் கார்டு என்ட்ரி ஆக உள்ளே வந்த தினேஷ் கடந்த இரண்டு வாரங்களாக கேப்டனாக தொடர்ந்து வந்த நிலையில், இந்த வார கேப்டனாக நிக்சன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்த நிலையில் நிக்சன் கேப்டன் ஆவது இதுதான் முதல் முறை. நாமினேஷனில் இருந்து தப்பிப்பதற்காகவே கேப்டனாக வேண்டும் என்று எல்லோருமே நினைப்பதுண்டு.

Also Read:கமல் கேட்ட கேள்விக்கு சூடு சொரணை இருந்தா தூக்குல தொங்கிடு பூர்ணிமா.. சரியான சவுக்கடி

ஆனால் எதற்கு கேப்டன் ஆனோம் என்று யோசிக்கும் அளவுக்கு நிக்சன் நிலைமையை மாற்றி இருக்கிறார் பிக் பாஸ். அதாவது இன்று காலை பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு பெரிய மணி ஒன்றை வைத்து இருக்கிறார்கள். நிக்சன் கேப்டன்சியில் ஏதாவது அநீதி நடந்தால் அந்த மணியை அடிக்க வேண்டும் என்று பிக் பாஸ் சொல்லி இருக்கிறார்.

நிக்சனுக்கு வச்ச செக்

அநீதியை சுட்டிக்காட்டி யார் மணி அடித்தாலும் அந்த விஷயம் விசாரிக்கப்படும் என்று பிக் பாஸ் சொல்லி இருக்கிறார். ஒரு வேளை கொடுத்த புகார் நிரூபிக்க பட்டால் அந்த நிமிஷம் நிக்சன் இடமிருந்து கேப்டன் பதவி பறிபோகும் என்றும், அதோடு மட்டுமில்லாமல் அடுத்த வாரம் நாமினேஷனுக்கு அவர் நேரடியாக போக வேண்டும் என்று தலையில் குண்டை தூக்கி போட்டு இருக்கிறார் பிக் பாஸ்.

இதுவரை எந்த சீசனிலும் இப்படி ஒரு விஷயத்தை பிக் பாஸ் சொன்னதே இல்லை. ஒருவருக்கு கேப்டன் பதவியும் கொடுத்துவிட்டு புகார் கொடுத்தால் உடனே பதவியும் பறிபோய்விடும் என்று சொல்லியது வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது. பிக் பாஸ் சொன்னதை கேட்டு மாயா மற்றும் பூர்ணிமா சந்தோஷத்தில் துள்ளி குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிக் பாஸ், கேப்டன் பதவி பறிபோவதோடு நேரடி நாமினேஷனிலும் நிக்சன் சிக்குவார் என்று சொல்லியது மாயா மற்றும் பூர்ணிமாவுக்கு சரியான வாய்ப்பாக அமைந்திருக்கிறது. நிக்சன் தேவை என்றால் நம்மிடம் வருகிறான். இல்லை என்றால் நம்மை கண்டு கொள்வதே இல்லை. இந்த வாரம் நிக்சனை வெளிய அனுப்ப வேண்டும் என்று இருவரும் பிளான் போடுகிறார்கள்.

Also Read: ஹவுஸ் மேட்ஸ்சை கிழித்து தொங்க போடும் அனன்யா.. தரமான சம்பவங்களுடன் பிக்பாஸ்

Trending News