வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சிம்புவை வச்சு செய்யும் ப்ளூ சட்டை மாறன்.. உருவ கேலிக்கு இப்படி ஒரு பதிலடியா?

கௌதம் மேனன், சிம்பு கூட்டணியில் வெளியாகி இருக்கும் வெந்து தணிந்தது காடு படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியாகி நான்கு நாட்கள் மட்டுமே ஆன நிலையில் 50 கோடி வசூல் வேட்டையாடி உள்ளது. இப்படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது.

அதில் பேசிய சிம்பு, இதற்கு முன்னதாக வெளியான என்னுடைய படங்களை வைத்து நிறைய உருவக் கேலிகள் செய்திருந்தார்கள். ஆனால் இப்போது வெந்து தணிந்தது காடு படத்திற்காக எனது உடம்பை கடுமையான உடற்பயிற்சி மூலம் குறைத்துள்ளேன். ஆனால் இதுபோன்று உருவ கேலிகள் யாரையும் செய்ய வேண்டாம் என்று சிம்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

Also Read :ஒரே போடாய் உண்மையை போட்டுடைத்த கூல் சுரேஷ்.. நண்பனுக்கு உதவாத சிம்பு

ஆனால் இது மறைமுகமாக ப்ளூ சட்டை மாறனை தாக்கி தான் சிம்பு பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து சிம்புவை பற்றிய செய்திகளை வெளியிட்டு வருகிறார். அதாவது சிம்பு படத்தில் உள்ள பாடல் வரிகளை பதிவிட்டு வருகிறார்.

தம் படத்தில் இடம்பெற்ற கண்ணம்மா கண்ணம்மா என்ற பாடலில் “ வாடி பொட்ட புள்ள வளைஞ்சு நெளிஞ்சி போற புள்ள, கண்ணடிச்சா பாத்தாலும் கண்டுக்கல”, உன் கற்பு போகும்படி இப்போ என்ன ஆச்சு என்ற பாடல் வரிகளை பதிவிட்டு பொட்டபுள்ள, கற்பு என்று தமிழ் பெண்களுக்கு சிறந்த மரியாதை கொடுத்துள்ளார் சிம்பு என ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டு உள்ளார்.

Also Read :தூக்கிவிட்டவரை மறந்து சிம்புவை பாராட்டிய சிவகார்த்திகேயன்.. வெளிப்படையாக உண்மையை போட்டுடைத்த நடிகர்

மேலும் சிம்பு நடிப்பில் வெளியான வேறு சில படங்களில் உள்ள பாடல்களையும் பதிவிட்டு தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். அதுவும் உருவக் கேலியை பற்றி பேசும் சிம்புக்கு முதலில் இந்த வரிகளுக்கு அர்த்தம் தெரியவில்லையா என்பதை போன்று ப்ளூ சட்டை மாறன் குறிப்பிட்டுள்ளார்.

blue-sattai-maran

இதற்கு சிம்பு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து சிம்பு படங்களில் உள்ள பாடல் வரிகளை பதிவிட்டு வருகிறார். மேலும் வெந்து தணிந்தது காடு படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும்போது ப்ளூ சட்டை மாறனின் இந்த செயலால் படத்தின் வசூல் பாதிக்கும் என பேசப்படுகிறது.

Also Read :சிம்புவுக்காக கதையையே மாற்றிய கௌதம் வாசுதேவ் மேனன்.. ஐடியாவே இல்லாமல் சுற்றிதிரிந்த STR

Trending News