NEET: நீட் எழுத குவிந்த 24 லட்சம் மாணவர்கள்.. தேர்வு எப்படி இருந்தது.?

NEET: இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நடைபெற்றது. பொது மருத்துவம், பல் மருத்துவம் ஆகியவற்றிற்கு நீட் தேர்வு கட்டாயமாகப்பட்டிருக்கிறது.

இதற்கு பல எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டாலும் தொடர்ந்து இந்த தேர்வை அரசு நடத்தி வருகிறது. அதன் படி இன்று தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதியுள்ளனர்.

அதேபோல் இந்தியா முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி இருக்கின்றனர். மேலும் 557 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 13 மொழிகளில் எக்ஸாம் நடத்தப்பட்டுள்ளது.

நீட் தேர்வு எப்படி இருந்தது

2 மணிக்கு ஆரம்பித்த இந்த தேர்வு 5.20 வரை நடைபெற்றது. கடுமையான சோதனைகள் செய்த பிறகு தான் மாணவ மாணவிகள் தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் பயாலஜி சம்பந்தப்பட்ட கேள்விகள் சுலபமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இயற்பியல் மற்றும் வேதியல் கொஞ்சம் கடினமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

இப்படியாக நீட் தேர்வு இன்று ஒரு வழியாக நடந்து முடிந்துள்ளது. நாளை 12ஆம் வகுப்பிற்கு தேர்வு முடிவுகள் வெளிவர இருக்கின்றது. அதற்காக தற்போது மாணவர்கள் பதட்டத்துடன் காத்திருக்கின்றனர்.