சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

ஒரே மீமிஸ்-ல சிவகார்த்திகேயன் மானத்தை வாங்கிய மில்லர்.. தனுசை பார்த்து பயந்த அயலான்

Sivakarthikeyan and Dhanush: ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை நாளை முன்னிட்டு புது புது படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆவது வழக்கமாக வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு எக்கச்சக்கமான படங்கள் ரிலீஸுக்காக வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பல வருட காலமாக இழுவையில் இழுத்து அடித்திருந்த சிவகார்த்திகேயன் அயலான் படம் தற்போது ஓரளவுக்கு முடிவுக்கு வந்துவிட்டது.

அதனால் இப்படத்தை பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆவதற்கு தயாராகிவிட்டது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் படம் ஏற்ற இறக்கத்துடன் தான் வெற்றி அடைந்து வருகிறது. அந்த வகையில் ரொம்பவே கடன் பட்டு நொந்து நூடுல்ஸ் ஆகி வெற்றியை பார்ப்பதற்கு போராடி வருகிறார். இதற்கிடையில் வேற அவருடைய இமேஜுக்கு களங்கம் வந்துவிட்டது.

இதனால் தற்போது வெளி வருகிற அயலான் படம் எந்த அளவிற்கு மக்களிடம் ரீச் ஆகப்போகுது என்ற பயத்திலேயே இருந்து வருகிறார். தற்போது இது இன்னும் அதிகரிக்கும் வகையில் தனுஷின் கேப்டன் மில்லர் படமும் அதே நாளில் வெளிவர போகிறது. இப்படம் ஒரு பீரியட் படமாக ஆக்ஷன் கலந்து இருப்பதால் மக்கள் ஒருவேளை இப்படத்தை கொண்டாட ஆரம்பித்து விட்டால் சிவகார்த்திகேயனுக்கு மிகப் பெரிய தோல்வி ஆகிவிடும்.

Also read: சமாதிக்கு போனா சந்தி சிரிக்க வச்சுருவாங்களே.! ஜகா வாங்கும் சிவகார்த்திகேயன்.. வசமாக சிக்கிய அயலான்

இப்படி இவர்கள் இருவரின் படமும் மோதிக் கொள்வதால் இவர்களுடைய படங்களை வைத்து மீமிஸ் ஒன்று ரெடியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது சிவகார்த்திகேயன் தனுஷை பார்த்து பார்த்து வா பங்காளி மொத்தமும் கடன் இருக்கு என்று சொல்வது போல் மீமிஸ் நாலா பக்கமும் பரவி வருகிறது.

ஆனாலும் தனுஷ் கொஞ்சம் கூட பின்வாங்காமல் அயலானுக்கு போட்டியாக கேப்டன் மில்லர் படத்தை இறக்குவதற்கு தயாராகி விட்டார். இருந்தாலும் சிவகார்த்திகேயன் படத்தை குழந்தைகள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள். அதிலும் இப்படம் ஏலியன்ஸ் கதையை சம்பந்தப்பட்டு இருப்பதால் ஏற்கனவே குழந்தைகள் இப்படத்தை பார்க்க வேண்டும் என்று வீட்டில் அடம்பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அதுமட்டுமல்லாமல் குடும்பத்துடன் பார்க்கும் படமாக தான் நிச்சயம் சிவகார்த்திகேயன் படம் இருக்கும். அதனாலே குடும்பத்துடைய சப்போர்ட் கண்டிப்பாக அயலான் படத்துக்கு கிடைக்கும். இருந்தாலும் வித்தியாசமான லுக்குடன் மிரட்டலான நடிப்பை கொடுத்து வரும் தனுஷின் கேப்டன் மில்லர் படம் ஓவர் டேக் பண்ணுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ayalan
ayalan

Also read: கூட நிக்க முடியாமல் திணறும் ரெண்டு படம்.. தனுஷை மிஞ்சி சிவகார்த்திகேயன் போடும் ஆட்டம்

Trending News