புதன்கிழமை, ஜனவரி 1, 2025

6 நிமிடத்தில் பாடலை எழுதிக் கொடுத்த தனுஷ்.. வாயை பிளந்த இசையமைப்பாளர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். ஒரு காலத்தில் இவர் படம் வெளியானால் பல விமர்சனங்கள் எழும் ஆனால் தனது திறமைகள் மூலம் பல விருதுகளும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பதால் இவருடைய படத்திற்கு ஏகபோக வரவேற்பு இருந்து வருகிறது.

இவ்வளவு ஏன் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் கூட மிகப் பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது மட்டுமில்லாமல் விமர்சன ரீதியாகவும் பெயர் பெற்றது.

அசுரன் படத்தில் இவரது நடிப்பை பார்த்து விட்டுப் புகழாத நடிகர்களே கிடையாது அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் இவரது நடிப்பிற்கு தேசிய விருதும் கிடைத்தது.

தனுஷ் என்றால் நடிகர் என்பதை தாண்டி அவர் பன்முகத் திறமை கொண்டவர் என அனைவருக்கும் தெரியும் படங்களில் நடிப்பது, பாடல் எழுதுவது, பாடுவது மற்றும் இயக்குவது என அனைத்து துறைகளிலும் கால் பதித்து விட்டார்.

இவர் 3 படத்தில் பாடிய “வை திஸ் கொலவெறி” பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் இப்பாடல் எழுதுவதற்கு வெறும் 6 நிமிடம் தான் எடுத்துக் கொண்டுள்ளார்.

இதனை பார்த்த அனிருத் 6 நிமிடத்தில் பாடலை எழுதி முடித்து விட்டீர்களா என வாய்பிளக்க கேட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் இணைந்து பல பாடல்கள் பணியாற்றியுள்ளனர்.

Trending News