வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சொந்த ஊரில் சோடைப்போன தில் ராஜு.. வாரிசு படத்தால் ஏற்பட்ட அவமானம்

தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தில் ராஜு. அங்கு டாப் நடிகர்களின் படங்களை தில்ராஜு தயாரித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் வாரிசு படத்தையும் தில் ராஜு தான் தயாரித்திருந்தார்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் வாரிசு படம் வெளியாவதற்கு பல பிரச்சனைகள் எழுந்தது. ஆனால் அங்கு தில் ராஜுவின் பலத்தினால் அதிக திரையரங்குகள் பெற்று வாரிசு படத்தை வெளியிட்டார். மேலும் பண்டிகை காலங்களில் சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா படங்கள் அங்கு வெளியானது.

Also Read : தமிழ்நாட்டில் துணிவை நெருங்க கூட முடியாத வாரிசு.. அதுக்குன்னு 30% பின்தங்கி அவலம்

ஆகையால் இரண்டு நாட்களுக்குத் தள்ளி வாரிசு படத்தை தில் ராஜு வெளியிட்டார். ஆனால் இன்று வரை அங்கு 8 கோடியை கூட தொட முடியாமல் வாரிசு படம் தவித்து வருகிறது. மேலும் தில் ராஜுவை பொருத்தவரையில் அங்கு 50 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்த்து இருந்தார்.

மேலும் இனிவரும் காலங்களில் அங்கு விடுமுறை நாட்கள் மிகவும் குறைவு தான். வேலை நாட்கள் அதிகமாக இருப்பதால் வாரிசு படம் இனி அங்கு வசூல் செய்வது கடினம் தான். அதுமட்டுமின்றி தெலுங்கு ரசிகர்களிடையே வாரிசு படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது.

Also Read : வாரிசு மண்ணை கவ்வியதுன்னு யாருப்பா சொன்னா.? துணிவுக்கு போட்டியாக வசூலை அள்ளிய விஜய்

மகேஷ் பாபுவின் படத்தை வம்சி பட்டி டிங்கரிங் பார்த்துள்ளார் என ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். இந்நிலையில் வாரிசு படத்தின் மூலம் சொந்த ஊரிலேயே தில் ராஜுவால் வசூலை பெற முடியவில்லை. ஆனால் பொது மேடைகளில் மற்ற நடிகர்களை இழிவாக பேசி வருகிறார்.

மேலும் தெலுங்கிலே வாரிசு படம் வசூல் செய்யாத நிலையில் உலகம் எங்கும் அதிக வசூல் செய்ததாக படக்குழு அறிவித்து வருகிற செய்தி எல்லாம் நம்பற மாதிரியா இருக்கு என சோசியல் மீடியாவில் பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இன்று கூட உலகம் முழுவதும் வாரிசு படம் 210 கோடி வசூல் செய்தது என படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.

Also Read : விஜய்காக மட்டுமே வாரிசு படத்தில் நடித்தேன்.. மற்றபடி என்னுடைய கதாபாத்திரம் வேஸ்ட் தான்

Trending News