வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

அயோத்தி சென்ற சூப்பர் ஸ்டார் பேசுனதுல எனக்கு விமர்சனம் இருக்கு.. பரபரப்பான பேட்டியை அளித்த பா ரஞ்சித்

Director Pa Ranjith criticized Rajini’s speech: இயக்குனர் பா ரஞ்சித் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை தோலுரித்துக் காட்டக்கூடிய படங்களை இயக்கியும் தயாரித்தும் கொண்டிருக்கிறார். அந்த வகையில் அவருடைய நீலம் தயாரிப்பு நிறுவனத்தால் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் நடிப்பில் உருவாகி இருக்கிற ‘ப்ளூ ஸ்டார்’ படம் ஜனவரி 25ஆம் தேதி ரிலீஸ்ஆகிறது.

இந்தப் படத்தில் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பா ரஞ்சித் பேசினார். அப்போது, ‘அயோத்தி ராமன் கோயில் திறப்பு விழாவிற்கு சென்ற சூப்பர் ஸ்டார் சொன்ன விஷயத்தில் எனக்கு விமர்சனம் உள்ளது’ என்று கோபத்துடன் பேசினார். ரஜினி ராமன் கோயில் திறப்புக்கு போனது அவருடைய விருப்பம்.

அவர் ஏற்கனவே அவருடைய கருத்தை வைத்திருக்கிறார். அவர் 500 ஆண்டு பிரச்சனை தீர்ந்து விட்டதாக சொன்னார், இது எனக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை. ஏனென்றால் அந்த பிரச்சனைக்கு பின்னாடி இருக்கும் அரசியலை கேள்வி கேட்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. அவர் பேசிய விஷயங்கள் சரி, தவறு என்பதைத் தாண்டி அதுல எனக்கு விமர்சனம் இருக்கு.

Also Read: அயோத்தியில் சச்சின், ரஜினி, அம்பானிக்கு மட்டுமே கிடைத்த கௌரவம்.. ஆவேசமாய் சூப்பர் ஸ்டார் கேட்டு வாங்கிய அனுமதி

ரஜினி பேசியதை கடுமையாக விமர்சித்த பா ரஞ்சித்

நம்முடைய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தொடர்ந்து புறக்கணிப்பது மோசமானது. அயோத்தி ராமன் கோயில் திறப்பு விழா மிகவும் முக்கியமான நாள். வீட்டில் யாரெல்லாம் கற்பூரம் ஏற்றவில்லையோ அவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் ஆகிவிடுவோம்.

இந்தியா இப்போது தீவிரவாத காலகட்டத்தை நோக்கி நகருகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் எவ்வளவு மோசமான இந்தியாவில் நாம் இருக்கப் போகிறோம் என்பது நமக்கு தெரியாது. அந்த மாதிரியான காலகட்டத்தில் தான் நுழைவதற்கு முன்பாக நம்மை நாமே பண்படுத்திக் கொள்ள வேண்டும்.

மூளையில் ஏற்றி வைத்திருக்கும் பிற்போக்குத்தனத்தையும், மதவாதத்தையும் நம்மிடம் இருக்கக்கூடிய கலையை தான் ஆயுதமாக பயன்படுத்தி வருகிறோம். தற்போது இந்தியாவை மோசமான காலகட்டத்தை நோக்கி தள்ளிவிடாமல் நிறுத்துவதற்கு நம்மால் முடிந்த வேலைகளை செய்ய வேண்டும் என்றும் பா ரஞ்சித் ஆவேசத்துடன் பேசினார்.

Also Read: அயோத்தியில் சங்கமித்த 3 நண்பர்கள்.. ரஜினிக்கு மட்டும் ஒதுக்கிய சேர், குடும்பத்துக்கு கிடைக்காத மரியாதை

Trending News