வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

கல்யாணம் மட்டும் சிம்பிளா.? மாப்பிள்ளை ஆதித்க்கு பிரபு கொடுத்த வரதட்சணை என்ன தெரியுமா.?

Dowry Given By Prabhu To The Groom Adhik: சிவாஜியின் பேத்தி, பிரபுவின் மகள், விக்ரம் பிரபுவின் அக்கா ஐஸ்வர்யா, ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் செய்யும் செய்தி தான் தற்பொழுது எங்கும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஐஸ்வர்யாவை விட ஆதித் ரவிச்சந்திரன் 9 வயது இளையவர். இவர்களுக்கு எப்படி காதல் வந்தது திருமணம் நடந்தது என பல விதத்தில் பேசப்படுகிறது.

பிரபுவின் மகளுக்கு விவாகரத்து ஆனது இந்த செய்தி மூலம் தான் தெரியவந்தது. சிவாஜி குடும்பத்தில் உள்ள ஒரு பழக்கம் தனது சொந்தங்களுக்குள்ளேயே திருமணம் செய்து வைத்துக் கொள்வார்கள். அப்படி ஐஸ்வர்யாவுக்கு பிரபுவின் அக்காவின் மகனுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.

சிவாஜியின் சொத்தை பிரித்ததில் அக்காவை ஏமாற்றி விட்டார் பிரபு மற்றும் ராம்குமார் என்று கூறி பிரச்சினை செய்து தன் மகனை ஐஸ்வர்யாவிடம் இருந்து விவாகரத்து வாங்கி கொடுத்து விட்டார் பிரபுவின் அக்கா. அதன் பின் ஐஸ்வர்யா காஸ்டியூம் டிசைனிங் செய்து வந்தார். சினிமாவில் பணியாற்றும் பொழுது திடீரென ஆதிக் ரவிச்சந்திரன் பழகி இருவரும் காதலிக்க தொடங்கினர். இந்த திருமணத்திற்கு பிரபு பச்சைக்கொடி காட்டினார்.

Also Read : சொந்தத்தில் திருமணம் செய்தும் நடந்த விவாகரத்து.. முதல் கணவரை பிரபு மகள் பிரிய காரணம் இதுதான்

திருமணத்தை மிக பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்தார் பிரபு. அதற்கு ஆதிக் ரவிச்சந்திரன் அப்படி செய்ய வேண்டாம் நமக்கு தெரிந்தவர்களை மட்டும் கூப்பிட்டு சிம்பிளாக செய்துவிடலாம் என்று சொல்லிவிட்டாராம். இதற்கு காரணம் இன்னும் நான் பெரிய இயக்குனராக வரவேண்டும். அதுதான் எனது கனவு எனது அப்பா இயக்குனராக ஆசைப்பட்டு அது நடக்கவில்லை.

அதனால் இந்த திருமணத்தை பிரமாண்டமாக செய்து எனது கனவை நான் மறைக்க விரும்பவில்லை. இதனால் பிரபுவும் சரி என்று சொல்லி அவர் ஆசைப்படி செய்து விட்டார். ஆனால் பிரபு அவர் வசதிக்கு தகுந்த மாதிரி வரதட்சனை, சொகுசு கார், பங்களா போன்றவை அள்ளிக் கொடுத்துள்ளார். மாப்பிள்ளைக்கு 500 கோடி கொடுத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

தனுஷ் எப்படி சிறிய நடிகராக இருந்து ரஜினியின் மகளை திருமணம் செய்து அவர் மூலம் பல வாய்ப்புகளைப் பெற்று முன்னணி நடிகராக மாறினாரோ. அதேபோல ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் பிரபுவின் குடும்பத்தின் மூலம் பல ஆதரவுகள் கிடைக்கும் இதை வைத்து தன் திறமையின் மூலம் பெரிய இயக்குனராக வருவார் என்று நன்றாக தெரிகிறது. முக்கியமாக சிவாஜி குடும்பத்தில் மாப்பிள்ளையாக ஆனதே பெரிய விஷயம் இதில் எதற்கு பிரம்மாண்டமான திருமணம் என்று எளிமையாக நடந்து கொண்டார் ஆதித் ரவிச்சந்திரன்.

Also Read : அஜித்தின் ட்ரெண்ட்டை மாற்றப் போகும் பிரபுவின் மருமகன்.. கேட்கவே காமெடியாக இருக்கு

Trending News