புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மகளுடன் சேர்ந்து பாக்யா அடிக்கும் கூத்து.. இவ்வளவு மட்டமாவா உருட்டுவீங்க என தலையில் அடிக்கும் கோபி

Baakiyalakshmi: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் இப்போது யாருமே எதிர்பாராத சில விஷயங்கள் நடக்க உள்ளது. அதாவது இத்தொடரின் கதாநாயகி பாக்யா ஆரம்பத்தில் கோபி எது சொன்னாலும் தலையாட்டும் மனைவியாக இருந்து வந்தார். கோபி ராதிகாவுடன் பழகும் விஷயம் தெரிந்த உடன் இந்த போக்கையே மாற்றிக் கொண்டார் பாக்யா.

அதன்படி அடுப்பாங்கரையே கதி என்று கிடந்த பாக்யா இப்போது சமையல் ஆர்டர் எடுத்து மாதத்திற்கு லட்சங்கள் லாபம் பார்த்து வருகிறார். இது ஒரு புறம் இருக்கா கோபி இத்தனை வருடமாக வேலை பார்த்தும் அடக்க முடியாத வீட்டில் லோனை சில மாதங்களிலேயே மொத்தமாக கொடுத்து விடுகிறார் பாக்யா.

Also Read : வாயில ஈ போவது கூட தெரியாமல் அண்ணாந்து பார்த்து கோபி.. பொளந்து கட்டிய பாக்யா

பாக்யாவுக்கு இங்கிலீஷ் தெரியாது என மட்டம் தட்டிய நிலையில் இப்போது இனியாவின் காலேஜில் சரளமாக ஆங்கிலம் பேசி கோபியை திக்கு முக்காடா செய்தார். இதையெல்லாம் ஏற்றுக் கொண்டாலும் இனி வரும் எபிசோடுகளில் மற்றொரு கூத்து அரங்கேற இருக்கிறது. அதாவது பாக்யா லோன் வாங்குவதற்காக வங்கியை அணுகுகிறார்.

அந்தச் சமயத்தில் எல்லாவற்றையும் பார்த்த வங்கி மேலாளர் டிகிரி படித்திருந்தால் மட்டுமே லோன் கொடுக்க முடியும் என்று கூறி விடுகிறார். அது தானும் காலேஜ் படித்து டிகிரி வாங்க வேண்டும் என்ற எண்ணம் பாக்யாவுக்கு வருகிறது. இது குறித்த தனது மகள் இனியாவிடம் பாக்யா கேட்கிறார்.

Also Read : குடும்பப் பிரச்சினையை வைத்து குளிர் காய நினைக்கும் விஜய் டிவி.. பிக் பாஸை நாரடிக்கப் போகும் 3 சர்ச்சையான ஜோடிகள்

படிக்கிறேன்னு மட்டும் வந்துடாதம்மா என இனியா கூறும் நிலையில் எந்த வயதில் வேணாலும் படிக்கலாம் என்று பாக்யா சொல்கிறார். ஆகையால் இனி இனியாவுடன் பாக்யாவும் காலேஜுக்கு புறப்பட இருக்கிறார். இதைப் பார்த்து கோபி இன்னும் எரிச்சல் அடைய இருக்கிறார்.

என்னடா மட்டமாவா உருட்டுவீங்க என தலையில் அடிக்காத குறையாக கோபி புலம்ப இருக்கிறார். படிப்பதற்கு வயது தடை இல்லை என்பது நிதர்சனமான உண்மை என்றாலும் இப்போது உள்ள இளைய சமுதாயம் தொழிலுக்காக தான் படிப்பை மேற்கொள்கிறார்கள். பாக்யாவுக்கு இப்போது சமையல் ஆர்டர் எடுக்கவே நேரம் சரியாக இருக்கும் நேரத்தில் காலேஜுக்கு போவது போல் காண்பிப்பது வேடிக்கையாக தான் இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Also Read : டிஆர்பி-யை எகிற வைக்க வரும் பிக்பாஸ் சீசன் 7.. தரமான 10 போட்டியாளர்களை இறக்கும் விஜய் டிவி

Trending News