டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற இணையதளங்கள் பொழுதுபோக்காக இருந்தாலும் பலருக்கும் அது தொழிலாகவும் மாறி வருகின்றது. அதன் மூலம் தங்களுடைய புகழை அதிகப்படுத்தி பணம் சம்பாதித்து வருகின்றனர்.
இந்த மாதிரி சமூக வலைதளங்களில் ஹீரோ மாதிரி இருப்பவர்களும் ரசிகர்களால் கவரப்படுவார்கள். அதேசமயம் கேவலமாக வீடியோ செய்பவர்கள் அபார வளர்ச்சியை பெற்று ஏகப்பட்ட பார்வையாளர்களையும் பெற்று விடுவார்கள்.
அப்படி ஆரம்பத்தில் சூர்யா என்ற பெண்மணியுடன் சேர்ந்து கூத்தடித்த ஜி பி முத்து தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். மேலும் அவருடைய திருநெல்வேலி பாஷை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.
இதன் காரணமாக தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு இணையாக ஜிபி முத்துவின் வசனங்களும் புகைப்படங்களும் மீம்ஸ்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் சினிமாவிலும் நடிக்க உள்ளாராம்.
இதனால் பெயரும் புகழும் சம்பாதித்த ஜி பி முத்து தற்போது சொந்தமாக செகனண்ட்டில் ஒரு கார் வாங்கியுள்ளார். செகனண்ட்டோ புதுசோ கார் கார் தானே. தன்னுடைய விடா முயற்சியால் தற்போது பரம்பரையிலேயே முதல் கார் வாங்கியுள்ளாராம்.
இதனை வீடியோவாக அவருடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஜிபி முத்துவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
