வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

Salaar Movie Review- கன்சார் சாம்ராஜ்யத்திற்கு எதிராக எரிமலையாய் வெடிக்கும் பிரபாஸ்.. சலார் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

Salaar Movie Review: கேஜிஎஃப் மூலம் உலக அளவில் கவனம் பெற்ற பிரசாந்த் நீல் பாகுபலி நாயகனை வைத்து செதுக்கியுள்ள சலார் இன்று வெளியாகி இருக்கிறது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் முதல் காட்சியிலேயே ரசிகர்களால் தாறுமாறாக கொண்டாடப்பட்டது. அதன் விமர்சனத்தை பற்றி இங்கு காண்போம்.

வெளிநாட்டில் இருந்து வரும் ஸ்ருதிஹாசனுக்கு சில ரவுடி கும்பல்களால் ஆபத்து ஏற்படுகிறது. அவரை ஒரு கிராமத்தில் தன் தாயுடன் வாழும் பிரபாஸால் மட்டும்தான் காப்பாற்ற முடியும் என்ற நிலை இருக்கிறது. ஆனால் அவரோ தன் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தின் படி அடிதடி சண்டை என்றாலே ஒதுங்கி போகிறார்.

அப்படிப்பட்டவரை சீறும் வேங்கையாக பாய சொல்லி சத்தியத்தை திரும்ப வாங்குகிறார் அவருடைய அம்மா. அதை தொடர்ந்து கன்சார் சாம்ராஜ்யத்திற்கு எதிராக நிற்கும் பிரபாஸ் யார்? இதில் ஸ்ருதிஹாசன் எப்படி சிக்கினார்? பிரித்விராஜுக்கும் பிரபாஸுக்கும் என்ன சம்பந்தம்? போன்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த சலார்.

Also read: சலார் படத்தின் ப்ரீ புக்கிங் கலெக்ஷன் மட்டுமே இத்தனை கோடியா.? வசூலில் தும்சம் செய்யும் பிரபாஸ்

முழுக்க முழுக்க ஆக்ஷன் சரவெடியாக இருக்கும் இப்படம் பிரபாஸ் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். படத்தின் முக்கால்வாசி பகுதிகளை சண்டை காட்சியே ஆக்கிரமித்து விடுகிறது. அந்த அளவுக்கு எங்கு திரும்பினாலும் ரத்தம், ஆயுதம் என பிரபாஸ் ஆக்சனில் பொளந்து கட்டி இருக்கிறார். ஆனால் சென்டிமென்ட் காட்சிகளில் மட்டும் அவர் தடுமாறுவது வெளிப்படையாக தெரிகிறது.

அதே போன்று சென்டிமென்ட் காட்சிகள் கனெக்ட் ஆகாத உணர்வையும் கொடுக்கிறது. சில காட்சிகள் ரொம்பவும் கிரிஞ்சாக தெரிவதால் ரசிக்க முடியவில்லை. ஆனாலும் இயக்குனர் கதையை ஆரம்பித்த விதமும், இடைவேளை காட்சியின் ட்விஸ்ட்டும் பாராட்டும் விதத்தில் இருக்கிறது.

இருந்தாலும் அங்கங்கே கே ஜி எஃப் பட சாயல் தெரிவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் பிரபாஸ் மற்றும் பிரித்விராஜின் பெர்பார்மன்ஸ் அனைத்தையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறது. மேலும் கன்சார் நகரத்தின் அழகை அப்படியே உள்வாங்கி இருக்கிறது ஒளிப்பதிவு. கிராபிக்ஸ், ஆக்சன் காட்சிகளில் எல்லாம் பிரம்மாண்டம் தெரிகிறது.

Also read: பாகுபலி நாயகனை காப்பாற்றியதா சலார்.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

இருப்பினும் அதிகபட்ச வன்முறையால் இப்படம் அனைத்து தரப்பினரையும் திருப்தி செய்யும் என்று சொல்ல முடியாது. அதேபோன்று கொஞ்சம் பொறுமையை சோதிக்கும் காட்சிகளும் இருக்கிறது. ஆக மொத்தம் ஆக்சன் பிரியர்களுக்காகவே உருவாகி இருக்கும் இந்த சலார் எதிர்பார்ப்பை விட குறைவாக தான் இருக்கிறது.

சினிமாப்பேட்டை ரேட்டிங்: 3/5

- Advertisement -spot_img

Trending News