கடந்த 2006ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் க்ரைம் ஆக்ஷன் த்ரில்லர் படமாக வெளிவந்த வேட்டையாடு விளையாடு திரைப்படமானது மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது ஏனென்றால் இந்தப் படம் உலகம் முழுவதும் 500 மில்லியன் வசூலை ஈட்டி அதுமட்டுமல்லாமல் சென்னையில் மட்டும் சுமார் 16 திரையரங்கில் ரிலீஸ் செய்யப்பட்ட முதல் படம் என்ற பெருமையைப் பெற்றது.
இந்தப் படத்தை கௌதம் வாசம் மேனன் இயக்கி கமல், ஜோதிகா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் முதல் முதலாக கமல் படத்தில் இசையமைத்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் கமல் ராகவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். படத்தில் ராகவனின் அறிமுகக் காட்சியே அட்டகாசமாக இருக்கும்.
அதன்பின்பு ராகவன் காணாமல் போன வழக்கு ஒன்றின் பின்னாலுள்ள காரணத்தை கண்டு பிடிக்க முயற்சிப்பார். பின்னர் அவர் முன்னேற சில துப்புகள் பெறுகிறார். பின்பு அவரது விசாரணையின் மூலம் மீண்டும் மீண்டும் பதில்களை பெறுகிறார்.
அவருடைய ஸ்டைலான விசாரணை முறை பார்வையாளர்களால் நன்கு ரசிக்கப்பட்டது. அதன்பின்பு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இந்தப் படத்தில் ராகவனின் திருமண வாழ்க்கை பற்றிய ஒரு மகிழ்ச்சியான சுவாரசியமான ஃப்ளாஷ்பேக் ஒன்றை வைத்திருப்பார். இதில் கமல்ஹாசன் மற்றும் கமலினி முகர்ஜியின் காதல் காட்சிகள் கதைக்கு மேலும் உயிரூட்டின.
ராகவனின் முதல் மனைவி கமலினி முகர்ஜி இறந்த பின், ஜோதிகா மற்றும் ராகவனின் நட்புக்கு பின்பு வளரும் காதலானது புதிய வாழ்க்கையை தொடங்க தயாராவதை வெளிப்படுத்துகிறது. முடிவில் இந்தப் படம் முடிந்தவுடன் திரையரங்கில் பார்த்த பார்வையாளர்கள் அனைவருக்கும் மனநிறைவு கிடைத்திருக்கும் என்பது திட்டவட்டம்.
இதன் காரணமாகவே இதுவரை தமிழ் சினிமாவிற்கு வந்த போலிஸ் பின்னணியில் உருவாக்கப்பட்ட படங்களில் வேட்டையாடு விளையாடு படமானது முக்கிய இடத்தை வகிக்கிறது. தற்போது இந்த படம் வெளியாகி இன்றுடன் 15 வருடத்தை நிறைவு செய்தபோதிலும் மீண்டும் மீண்டும் ரசிகர்களை பார்க்கக்கூடும் திரைப்படமாகவே விளங்குகிறது.
இந்த படத்தின் தயாரிப்பாளர் நிதி நெருக்கடியால் தற்கொலை முயற்சிக்கு ஈடுபட்டுள்ளார். இதனால் கமலஹாசன் படத்தில் இருந்து விலகுவதாக இருந்தது. ஆனால் கௌதம் மேனன் தனது சொந்த காசை போட்டு படத்தை முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் கமலஹாசனை சமாதானப்படுத்த நடிக்க வைத்துள்ளார்.