வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சிவாஜி விழாவில் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட அவமானம்.. கெத்து காட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனதில் பட்டதை அப்படியே பேசக்கூடியவர். எதிரே எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் பயப்படாமல் பேசக்கூடிய ஒரே ஆள் ரஜினி தான். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று என்றெல்லாம் பார்க்க மாட்டார். அப்படிதான் சிவாஜி விழா ஒன்றில் ஜெயலலிதாவை எதிர்த்திருக்கிறார் ரஜினி.

அதாவது ஒரு காலத்தில் ரஜினி மற்றும் ஜெயலலிதா இருவருக்குமே ஏழாம் பொருத்தமாக இருந்திருக்கிறது. இவர்களுக்குள் அப்படி என்ன தகராறு என்று தெரியவில்லை. எப்போதுமே ஒருவரை ஒருவர் காலை வாரி கொண்டே இருந்தனர். அப்படிதான் செவாலியே சிவாஜி வழங்கும் விழா நடைபெற்றது.

Also Read: 2வது முறையும் அவருடன் பாடும் வாய்ப்பை இழந்த ரஜினிகாந்த்.. ஒத்திகை பார்க்கும் பொழுது ஏற்பட்ட சங்கடம்

அந்த விழாவில் எல்லோருமே வந்து விட்டனர். கலைஞர் கருணாநிதி, சிவாஜி கணேசன், ரஜினி போன்ற பலரும் மேடையில் அமர்ந்து இருந்தனர். அந்தச் சமயத்தில் தாமதமாக ஜெயலலிதா வந்திருக்கிறார். எல்லோருமே எழுந்து அவருக்கு பணிவான வணக்கத்தை கூறியிருக்கிறார்கள்.

ஆனால் ரஜினிகாந்த் முகத்தை திருப்பி கொண்டு ஜெயலலிதாவை கண்டுக்காமலும் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துவிட்டார். பொது மேடையில் ரஜினி இவ்வாறு செய்தது ஜெயலலிதாவிற்கு அசிங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவே இவர்களுக்குள் பகையை வளர்க்க பல வருடங்களாக பிரச்சனை போய்க்கொண்டிருந்தது.

Also Read: ஜெயலலிதாவை வேவு பார்க்க வந்த தில்லாலங்கடி லேடி.. நம்பிக்கை இல்லாமல் எம்ஜிஆர் செய்த வேலை

ஆனால் சமீபத்தில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவில் ரஜினி சில விஷயங்களை கூறியிருந்தார். அதாவது ஜெயலலிதா மற்றும் எனக்கும் ஏதோ மனக்கசப்பு இருந்து கொண்டே இருந்தது. ஆனாலும் எனது மகளின் திருமண விழாவிற்கு அழைக்க சென்றபோது பழசை எல்லாம் மறந்துவிட்டு நன்றாக பேசினார்.

அதோடு மட்டுமல்லாமல் மகளின் திருமணத்திற்கும் ஜெயலலிதா வந்திருந்தார் என நெகிழ்ச்சியாக ரஜினி பேசி இருந்தார். பொது மேடைகளில் யாருக்கும் பயமின்றி ரஜினி இவ்வாறு பேசுவது தான் அவரை சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துக்கு கொண்டு சென்றது. ஆனாலும் எந்த தலைக்கனம் இல்லாமலும் தான் செய்த தவறை ரஜினி எப்போதுமே ஒற்றுக்கொள்ள கூடியவர்.

Also Read: எம்ஜிஆர் கருணாநிதி சந்தித்த ஒரே மேடை.. 60 வருடத்திற்கு முன்பு நடந்த சம்பவத்தின் சாட்சி

Trending News