கவுண்டமணி மற்றும் செந்தில் காமினேஷன் அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர்களுடன் மூன்றாவது கூட்டணியாக இணைந்து காமெடியில் கலக்கியவர் தான் கல்லாப்பட்டி சிங்காரம்.
கோயம்புத்தூர் பாஷை பேசும் கல்லாப்பட்டி சிங்காரம் கரூரில் பிறந்தவர். இவர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கில்லி என்றுதான் கூற வேண்டும். அதிலும் குறிப்பாக ஒரு படத்தில் என்ன சிங்காரம் சோப்பும் கையுமா என்ன குளிக்கவா என கேட்க அதற்கு சிங்காரம் அது எல்லாம் காலையிலேயே முடிச்சிட்டேன் இப்ப நான் குளிக்க போறேன் என அசத்தலாக காமெடி செய்திருப்பார். இந்த காமெடி இன்றும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு தான் வருகிறது.
இவர் சினிமாவில் வெற்றி பெறுவதற்கு இவரது குரல் தான் காரணம் என்று கூட கூறலாம். ஏனென்றால் ஆடு அடித்தொண்டையில் இருந்து பேசுவதுபோல் இவரது குரல் இருக்கும் ஆனால் பல படங்கள் வெற்றி பெறுவதற்கு இந்த குரல் தான் காரணமாக இருந்தது.
1966ஆம் ஆண்டு சுந்தரம் பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியுள்ளார். ஆனால் தேனாம்பேட்டை அருகில் இருந்த 92 சி எனும் மென்ஷன்னில் தங்கியுள்ளார். அதே மென்ஷன்னில் தான் பாக்யராஜ்யும் தங்கியுள்ளார்.
கல்லாப்பட்டி சிங்காரத்தின் நடிப்பை பார்த்த பாக்கியராஜ் முதல்படமான சுவரில்லாத சித்திரத்தின் படத்தில் தனக்கு அப்பாவாக நடிப்பதற்கு கல்லாப்பட்டி சிங்காரம்த்திற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இப்படத்தில் பாக்யராஜுக்கு அப்பாவாக கல்லாப்பட்டி சிங்காரம் நடிப்பில் பின்னி பெடல் எடுத்து இருப்பார்.
அதன்பிறகு பாக்கியராஜ் நிறைய படத்தில் வெவ்வேறு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். படத்தை பார்க்க
போன்ற படங்களில் இவர் செய்த காமெடி அனைத்துமே ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அந்த அளவிற்கு இவரது நடிப்பு ரசிகர்களின் மனதில் பதிந்தது. கடைசியாக கிழக்கு வாசல் என்ற படத்தில் மட்டும் நடித்துவிட்டு தமிழ் சினிமாவை விட்டு விலகினார்.