செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சிம்புவை வைத்து புது பிசினஸுக்கு பிள்ளையார் சுழி போட்ட கமல்.. மொத்த ராஜதந்திரத்தையும் இறக்கிய ராஜ்கமல்

Simbu and Kamal: சிம்பு நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த பத்து தல படத்திற்கு பிறகு இன்னும் வரை எந்த படமும் சரியாக செட்டாகவில்லை என்று சொல்லும் அளவிற்கு தான் இருக்கிறது. இதற்கிடையில் சிம்பு, இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் என்று பல தகவல்கள் வெளியானது.

அதற்கு ஏற்ற மாதிரி ஒவ்வொரு விஷயங்களும் தொடர்ந்து வெளி வந்து கொண்டே இருந்தது. அதாவது இந்த ப்ராஜெக்ட் மொத்தம் 100 கோடிக்கும் மேல் செலவு செய்து எடுக்கப் போகிறோம் என்று கடந்த வருடம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வரை படத்தின் சூட்டிங் காலதாமதம் ஆகி கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்த படம் டிராப் ஆகிவிட்டது என ஒரு தகவல் பரவி வருகிறது.

ஆனால் உண்மையிலேயே படம் டிராப் ஆகவில்லை, அதற்கு பதிலாக கமல் அவருடைய ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் புதுசாக ஒரு டிராக்கை ஆரம்பிக்க போகிறார். அந்த வகையில் கமல் இதுவரை கற்றுத் தெரிந்த மொத்த ராஜதந்திரத்தையும் இறக்கப் போகிறார். அதாவது இப்படம் முழுக்க முழுக்க ஒரு வரலாற்று சம்பந்தமான படம்.

Also read: என்னது எங்களுக்குள்ள பகையா.? அஜித்குமாரை நேரில் சந்திக்கும் சிம்பு, இப்படி ஒரு காரணமா!

அதனால் இப்பிடத்திற்கு VFX பணிகள் அதிகமாக தேவைப்படுகிறதாம். அதற்காக கமல் இது சம்பந்தமாக ஒரு புது பிசினஸுக்கு பிள்ளையார் சுழி போட்டு இருக்கிறார். அதாவது இதுக்கு என்று ஒரு தனி ஆபீசை ஆரம்பித்து இந்த VFX பணிகள் தெரிந்த 4 ஊழியர்களை சம்பளத்திற்காக தேர்வு செய்திருக்கிறார். இவர்களை வைத்து இப்படத்திற்கு தேவையான அத்தனை தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி படத்தை எடுக்கப் போகிறார்.

அந்த வகையில் படத்திற்கு படமும் ஆச்சு, இனிமேல் ராஜ்கமல் நிறுவனத்தில் VFX பணிகளுக்கான பிசினஸும் கொடி கட்டி பறக்க போகிறது. அதனால் கமல் மற்றும் சிம்பு இவர்கள் இருவரும் இணைந்த இந்த ப்ராஜெக்ட் மிகப் பெரிய அளவில் பிரம்மாண்டமாக உருவாகப் போகிறது என்று ராஜ் கமல் நிறுவனத்தினர் கூறியிருக்கிறார். எது எப்படியோ இந்த வருட கடைசியிலையாவது சிம்பு படம் வெளி வந்தால் ரசிகர்கள் மிகப்பெரிய சந்தோசத்தை அடைவார்கள்.

Also read: போட்டி போட்டு ரீ-ரிலீஸ் ஆகிய ஹிட்டான 5 படங்கள்.. சிம்பு, தனுஷ் யுத்தத்திற்கு நடுவே வந்த வாரணம் ஆயிரம்

Trending News