ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கமலின் இன்றைய பஞ்சாயத்துக்கு வரும் 3 முக்கியமான விஷயங்கள்.. தாய்க் கிழவியுடன் செம டோஸ் வாங்க போகும் கேப்டன்

BB7: பிக் பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கப்பட்டு வெறும் ஐந்து நாட்களே கடந்த நிலையில் ஏகப்பட்ட சர்ச்சைக்குரிய விஷயங்கள் வீட்டில் வெடித்தது. மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசன் துவங்கப்பட்ட ஒரே வாரத்திற்குள் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. இருப்பினும் 18 போட்டியாளர்களுள் ஒருத்தர்கூட சோடை போகாத அளவுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகளை கிளப்பினர்.

இதற்கெல்லாம் கமல் வீக்கெண்டில் செம டோஸ் கொடுக்கப் போகிறார். அதனால் இன்று மற்றும் நாளைய எபிசோடுகளை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். அதிலும் இந்த 3 விஷயத்தை வைத்து கமல் நிச்சயம் பஞ்சாயத்து பண்ணுவார். வீட்டில் தாய் கிழவியாக சுற்றுபவரில் இருந்து கேப்டன் வரை ஆண்டவரிடம் செம டோஸ் வாங்க போகின்றனர்.

Also Read: டிஆர்பி-யில் முதல் 6 இடத்தை கெட்டியாக பிடித்த சீரியல்கள்.. எதிர்நீச்சலை பின்னுக்கு தள்ளி முதல் இடத்துக்கு வந்த சிங்கப்பெண்

அது பத்தாது என்று ஹவுஸ் மேட்சுகளுக்கு உரிமைக்குரல் என ஒரு பேண்ட் கொடுத்து இருக்கின்றனர். அதன் மூலம் வீட்டில் நடக்கும் அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்கவும் இருக்கின்றனர். நிச்சயம் கமல் வீட்டில் போட்டியாளர்களுக்குள் பேசப்பட்ட எஜுகேஷன் மேட்டரை பற்றி விவாதிப்பார்.

அதன் தொடர்ச்சியாக கேப்டன் விஜய் பிரதீப்பின் குற்றத்தை சுட்டிக் காட்ட வேண்டும் என்று வன்முறையாக பேசியது யாருக்குமே பிடிக்கல. ‘என்ன சீண்டுனா வெளியில என்னோட பாசக்கார பசங்க இருக்காங்க, வச்சு செஞ்சுருவாங்க’ என கேப்டன் போட்டியாளர்களிடம் சொன்னது ரொம்ப தப்பான விஷயம் என்று கமல் விஜய்யை பொலந்து கட்டப் போகிறார்.

Also Read: சிபிசிஐடி வேலை பார்த்தும் சல்லி காசுக்கு பிரயோஜனம் இல்ல.. பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகளுக்கு கிடைத்த ஏமாற்றம்

அத்துடன் இந்த வார தொடக்கத்தில் விசித்ரா ஐஷுவை நாமினேட் செய்யும் போது சொன்ன காரணம் ரொம்பவே சர்ச்சையை ஏற்படுத்தியது. ஐஷுவின் ட்ரெஸ்ஸிங் சென்ஸ், மேக்கப், அவர் உட்காரும் விதம் இதெல்லாம் சரி இல்ல. இங்க சின்ன வயசு பசங்க இருக்காங்க, பெரியவங்களும் இருக்காங்க எனவே கொஞ்சம் அவர் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று விசித்ரா சொன்னார்.

இவருடைய பேச்சுக்கு சோசியல் மீடியாவில் கண்டனம் தெரிவித்தனர். இதை வைத்து கமலும் விசித்ராவை வெளுத்து வாங்க போகிறார். ஒரு சைக்காலஜி பட்டம் பெற்ற உங்களுக்கு மற்றவர்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை என்று கமல் விசித்ராவை வீகண்டில் வச்சு செய்யப் போகிறார்.

Also Read: புலிக்குப் பிறந்தது பூனையாகுமா.? பிக்பாஸ் வீட்டையே அலறவிட்ட ஜோவிகா, வாயடைத்துப் போன விசித்ரா

அதேசமயம் படிப்பு வரலைனா, அத செத்து தான் நிரூபிக்கணும்னு அவசியம் இல்ல. எது வருதோ அதை வைத்து முன்னேறலாம் என்று வனிதாவின் மகள் ஜோவிகா செம போல்ட் ஆக பேசிய விஷயத்திற்கு கமல் பாராட்டும் தெரிவிப்பார்.

Trending News