புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

Fight Club Movie Review- வட சென்னையின் மற்றொரு களம்.. ரத்த வாடை தெறிக்கும் ஃபைட் கிளப் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

Fight Club Movie Review: லோகேஷ் வழங்கும் ஃபைட் கிளப் இன்று வெளியாகி இருக்கிறது. உறியடி புகழ் விஜய்குமார் மற்றும் பல புது முகங்கள் இணைந்து கலக்கி இருக்கும் இந்த படத்திற்கு தற்போது பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து கொண்டிருக்கிறது. அதன் விமர்சனத்தை இங்கு காண்போம்.

வடசென்னையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை அப்பாஸ் எ ரஹமத் இயக்கியுள்ளார். குத்துச்சண்டை வீரராக இருக்கும் பெஞ்சமின் தன்னுடைய ஏரியா இளசுகளையும் சிறந்த வீரர்களாக உருவாக்க ஆசைப்படுகிறார். ஆனால் அதற்கு எதிராக அவருடைய தம்பி மற்றும் நண்பர்கள் சிறுவர்களை தவறான பாதைக்கு பயன்படுத்துகின்றனர்.

இதில் நடக்கும் கைகலப்பில் பெஞ்சமின் தன் தம்பி ஜோசப்பால் கொல்லப்படுகிறார். அதை தொடர்ந்து நடக்கும் அரசியல் விளையாட்டில் செல்வாவாக வரும் விஜயகுமார் சிக்குகிறார். இதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை. பொதுவாக சினிமாவில் வடசென்னை பகுதியை பற்றிய ஒரு பிம்பம் இருக்கிறது.

Also read: ரொமான்ஸ் வராத லோகேஷ் தயாரிப்பில் வெளியான வீடியோ.. லிப் லாக் உடன் ஃபைட் கிளப் பாடல்

இதுவும் அதை மையப்படுத்திய கதையாக இருந்தாலும் அதை காட்சிப்படுத்தி இருக்கும் விதம் சிறப்பாக இருக்கிறது. போதை நெடி, ரத்தவாடை என படம் முழுக்க லோகேஷின் வழக்கமான சாயல் இருக்கிறது. துடிப்பான இளைஞனின் வாழ்க்கைக்குள் நுழையும் அரசியல் எந்த அளவுக்கு புரட்டி போடுகிறது என்பதை விஜயகுமார் தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதன் மூலம் அவர் ஒட்டுமொத்த ஆடியன்சையும் வசியப்படுத்தி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இவருக்கு அடுத்தபடியாக படத்தில் எங்கு திரும்பினாலும் புது முகங்கள் தான் இருக்கின்றனர். ஆனால் அவர்களும் தங்களுடைய கைதேர்ந்த நடிப்பால் சபாஷ் போட வைத்துள்ளனர்.

அதேபோன்று முதல் பாதியில் வரும் ஹீரோயின் அதன் பிறகு எங்கும் தென்படவில்லை. இருந்தாலும் காதல் காட்சிகள் கவனம் பெறுகின்றது. இப்படி படம் முதல் பாதியில் விறுவிறுப்பாக சென்ற நிலையில் இரண்டாம் பாதியில் சிறு தொய்வை காட்டுகிறது. இதற்கு முக்கிய காரணம் யூகிக்கும்படியான காட்சிகள் தான்.

Also read: முதலாளியாக வெற்றி பெறுவாரா லோகேஷ்.? வெளிவந்த ஃபைட் கிளப் ப்ரிவ்யூ ஷோ ட்விட்டர் விமர்சனம்

கிளைமாக்ஸ் காட்சியும் முன்பே கணிக்க முடிவதால் சுவாரஸ்யம் குறைகிறது. ஆனால் அதை எல்லாம் படத்தின் மேக்கிங், பின்னணி இசை மறக்கடிக்க செய்திருக்கிறது. அதிலும் கேமரா ரத்தம் தெறிக்கும் சண்டை காட்சிகளை அட்டகாசமாக காட்டி இருக்கிறது. ஆக மொத்தம் ஃபைட் கிளப் – தரமான சம்பவம்.

சினிமா பேட்டை ரேட்டிங்: 3.5/5

Trending News