வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

லவ் டார்ச்சர் கொடுத்தது சிம்புதான்.. ஆதாரத்தை வெளியிட்ட நடிகை

தற்போது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக பேசப்படுவது சிம்பு, ஸ்ரீநிதி விவகாரம் தான். சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தவர் நடிகை ஸ்ரீநிதி. இவர் பல்வேறு தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் ஓரளவு பிரபலம் அடைந்துள்ளார். இந்நிலையில் அஜித்தின் வலிமை படத்தின் போது இவர் போட்ட விமர்சனத்தால் கடுமையான சர்ச்சைகள் எழுந்தது.

தற்போது மீண்டும் ஒரு பரபரப்பை கிளப்பியுள்ளார். அண்மையில், ஒருநாள் எல்லாருக்கும் திருமணம் ஆகியிருக்கும், நானும் சிம்புவும் மட்டும்தான் மீதம் இருப்போம் என ஒரு பதிவை தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் சும்மாயிருந்த ஸ்ரீநிதியை, ஒரு ரசிகர் நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமே என ஏற்றிவிட்டு உள்ளார்.

இதுவும் நல்லாதான் இருக்கு என யோசித்த ஸ்ரீநிதி சிம்புவின் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டு உள்ளார். அப்போது சிம்பு வீட்டு முன் எடுக்கப்பட்ட வீடியோக்களை தனது சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு எங்களை சேர்த்து வையுங்கள் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இப்போதுதான் சிம்பு பல சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஃபுல் ஃபார்மில் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். மாநாடு வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனால் மீண்டும் ஒரு சர்ச்சை தலைவனுக்கு வந்து விடக்கூடாது என சிம்பு ரசிகர்கள் ஸ்ரீநிதி கழுவி ஊற்றி வருகிறார்கள்.

மேலும் பப்ளிசிட்டிக்காக தான் சிம்புவின் பெயரை ஸ்ரீநிதி பயன்படுத்துகிறார் எனவும் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீநிதி அப்பா இந்த விஷயங்களை தெரிந்து அவருக்கு மெசேஜ் செய்துள்ளார். அதற்கு ஸ்ரீநிதி, நான் சிம்புவை காதலிக்கவில்லை அப்பா, சிம்புதான் என்னை லவ் பண்றாரு, என்ன டார்ச்சர் பண்றாரு அவர்கிட்டே கேளுங்க, நான் பொய் சொல்ல மாட்டேன் தானே என பதில் அளித்துள்ளார்.

sreenidhi-reply-twit
sreenidhi-reply-twit

அந்த ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஸ்ரீநிதி வெளியிட்டுள்ளார். மேலும் ரசிகர்களிடம் சிம்புவைப் பற்றி என்னிடம் நீங்கள் கேட்பதற்கு பதிலாக, சிம்புவிடம் போய் என்னைப் பற்றிக் கேளுங்கள். நான் பொய் சொல்ல மாட்டேன் உண்மையாகத் தான் உள்ளேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

sreenidhi-reply-twit
sreenidhi-reply-twit

Trending News