திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

உருகி உருகி காதலித்து துரோகத்தால் வீழ்த்தப்பட்ட மனோரமா.. கைக்குழந்தையுடன் காலை வாரிவிட்ட கணவர்

Manorama: மனோரமா தன்னுடைய பயணத்தை ஒரு நாடக நடிகையாக தொடங்கிய பின்னரே வெள்ளித்திரையில் முத்திரையை பதித்தார். அதன் பின் இவரை செல்லமாக ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் ஆட்சி என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். இவர் கிட்டத்தட்ட 1500 படங்களுக்கும் மேலாக நடித்து கின்னஸ் சாதனையை படைத்திருக்கிறார். இன்னும் சொல்ல போனால் அனைத்து தலைமுறை நடிகர்களுடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவர்.

அத்துடன் நடிகையாக மட்டுமில்லாமல் 300-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். இப்படி இவரைப் பற்றி பல விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு தோண்ட தோண்ட அக்ஷய பாத்திரம் மாதிரி நிரம்பி வந்து கொண்டே இருக்கும். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இவருடைய தனிப்பட்ட திருமண வாழ்க்கையில் சோகம் நிறைந்த மறுபக்கம் இருந்திருக்கிறது. அதைப்பற்றி தற்போது கொஞ்சம் பார்க்கலாம்.

Also read: சூப்பர் ஸ்டாரை காயப்படுத்திய 5 பேர்.. வடிவேலு செய்த அதே தவறை செய்த மனோரமா

இவர் வெள்ளித்திரையில் வருவதற்கு முன்னரே மேடை நாடகங்களில் நடித்து வந்த கம்பெனியில் முக்கிய பொறுப்பில் இருந்த எஸ்.எம். ராமநாதன் என்பவரை உருகி உருகி காதலித்து வந்திருக்கிறார். இவர்களுடைய காதல் வீட்டிற்கு தெரிந்த பின்பு மனோரமாவிடம் உனக்கு அவர் எந்த விதத்திலும் பொருத்தமானவர் இல்லை என்று இவருடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

பின்பு ஒரு கட்டத்தில் இவர்களால் நம்முடைய காதல் தோல்வி அடைந்து விடக்கூடாது என்பதற்காக அவசர அவசரமாக யாருக்கும் தெரியாமல் திருச்செந்தூர் கோவிலில் எஸ்.எம் ராமநாதன் மனோரமா வை திருமணம் செய்து கொண்டார். பிறகு வீட்டிற்கு தெரிந்ததும் இவர்களை ஏற்றுக் கொள்ள அவர்களுக்கு மனம் இல்லை. அதனால் இவர்கள் இருவரும் தனியாக ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தார்கள்.

Also read: மனோரமா நடிப்பில் பட்டையை கிளப்பிய 8 கேரக்டர்கள்.. வில்லத்தனத்திலும் முத்திரை பதித்த ஆச்சி

அப்பொழுது இவர் கர்ப்பமான பின்பு தான் கணவரின் உண்மையான சுயரூபத்தை புரிந்து கொண்டார். அதாவது கணவரின் முழு நோக்கமே பணத்தில் மட்டும் தான். அதற்காக மனோரமா கர்ப்பமாக இருந்த போதிலும் அவரை மேடை நாடகங்களில் நடிக்க சொல்லி வற்புறுத்திருக்கிறார். இதையெல்லாம் சகித்துக் கொண்ட மனோரமாவுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதை கேள்வி பட்டும் ஒரு மாதம் வரை இவருடைய கணவர் குடும்பத்தை பார்க்க போகவில்லை.

அதன் பின் வந்ததும் கொஞ்சம் கூட பாசமே இல்லாமல் மறுபடியும் மனோரமாவை நடிக்க வா என்று வற்புறுத்தி இருக்கிறார். அதன் பின்னே மனோரமா வெறுத்துப் போய் தன் கைக் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளிவந்து வெள்ளித்திரையில் கால் பதித்திருக்கிறார். அதுவும் தன் மகனுக்கு எந்தவித கஷ்டமும் இல்லாமல் சொகுசாக வாழ வைக்கணும் என்பதற்காக பல அவமானங்களையும் தாண்டி பொறுப்பான அம்மாவாக இருந்திருக்கிறார்.

Also read: கமலுக்கு அம்மாவாக நடிக்க இருந்த நடிகை.. மனோரமாவால் வாய்ப்பிழந்த சம்பவம்

Trending News