வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

மோகன் ராஜா படத்தில் 3வது முறையாக நடிக்கும் பிரபல நடிகை… அடடே இது மெகா ஹிட்டாச்சே

லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. சமீபத்தில் இவர் நடிப்பில் ஓடிடி-யில் வெளியான நெற்றிக்கண் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் ரஜினியுடன் அண்ணாத்த, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் ஒரு தமிழ் படம், ஒரு தெலுங்கு படம் என 4 படங்களில் நடித்து வருகிறார். அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக லக்னோவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘லூசிபர்’. இப்படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. சிரஞ்சீவி நாயகனாக நடிக்கும் இப்படத்தை மோகன் ராஜா இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

chiranjeevi-mohan raja-cinemapettai
chiranjeevi-mohan raja-cinemapettai

2001ல் ஹனுமன் ஜங்க்ஷன் என்ற தெலுங்குப்படத்தை இயக்கியிருந்த மோகன் ராஜா 20 ஆண்டுகளுக்கு பின் லூசிஃபர் படம் மூலம் மீண்டும் தெலுங்கு படத்தை இயக்குவது குறிப்பிடத்தக்கது. இதில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவந்த நிலையில் தற்போது அவர் இப்படத்தில் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது.

இதன்மூலம் நடிகை நயன்தாரா, இயக்குனர் மோகன் ராஜாவுடன் 3-வது முறையாக இணைந்து பணியாற்ற உள்ளார். ஏற்கனவே மோகன் ராஜா இயக்கிய தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற படங்களில் நயன்தாரா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News