கஷ்டப்பட்டு நடித்தும் வாய்ப்பில்லாமல் தவிக்கும் 5 நடிகர்கள்.. ராஜா வீட்டு கண்ணுக்குட்டியாக இருந்தும் போராடும் விக்ரம் பிரபு

Vikram Prabhu : சினிமாவில் நல்ல நடிப்பு திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் சில நடிகர்கள் இருக்கின்றனர். அதாவது சினிமாவில் திறமை எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு அதிர்ஷ்டமும் முக்கியம். அவ்வாறு பல திறமைகள் வளர்த்துக் கொண்டும் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் தற்போது வரை போராடும் 5 நடிகர்களை பார்க்கலாம்.

ஜீவா : தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரியின் மகனாக சினிமாவில் நுழைந்தவர் தான் ஜீவா. மினிமம் கேரன்டி படங்களை கொடுத்து வந்த ஜீவாவுக்கு சமீபகாலமாக சறுக்கல் தான் ஏற்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக ஜீவா டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்களில் தான் நடித்து வருகிறார்.

சிபிராஜ் : சத்யராஜ் உடைய மகன் சிபிராஜ் தனது தந்தையுடனே சில படங்களில் நடித்தார். ஆனாலும் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படங்கள் எதுவும் அமையவில்லை. சமீபகாலமாக நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆனாலும் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

Also Read : ஹோட்டல் தொழிலில் லாபம் பார்க்கும் நடிகர் ஜீவா.. தண்ணி கூட ஃபிரீ இல்லையாம்!

ஷாம் : ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் ஷாம். இவருக்கு நல்ல நடிப்பு திறமை இருந்தும் சினிமாவில் நடுவில் பிரேக் எடுத்து விட்டார். அதன் காரணமாக இப்போது பெரிய நடிகர்களின் படங்களில் கேரக்டர் ரோல் தான் கிடைத்து வருகிறது.

விக்ரம் பிரபு : கும்கி என்ற முதல் படத்திலேயே அசாத்தியமான நடிப்பை காட்டி இருந்தார் விக்ரம் பிரபு. டாணாகாரன் போன்ற வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விக்ரம் பிரபுவுக்கு எப்போதும் அவரின் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. ராஜா வீட்டு கண்ணு குட்டியாக இருந்தும் போராடிக் கொண்டிருக்கிறார்.

பரத் : ஒரு காலத்தில் பரத்துக்கு என்று தனி ரசிகர்கள் இருந்தனர். ஆனால் ஒரே மாதிரியான படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததால் அவரது மார்க்கெட் சரியா ஆரம்பித்தது. அதன் காரணமாக இப்போதும் அவரது படங்கள் ரசிகர்களால் வரவேற்கப்படாமல் இருக்கிறது.

Also Read : அயலான் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் விபரத்தை வெளியிட்ட படக்குழு.. கேப்டன் மில்லரை முந்த முடிஞ்சதா?.