வாழ்க்கை தத்துவத்தை ஒரு வரியில் கூறிய அஜித்.. ஏகே இப்படிப்பட்டவரா.?

Ajith : அஜித் பத்மபூஷன் வாங்கியதில் இருந்ததே வாழ்த்து மழையாக வந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு கழித்து ஊடகத்திற்கு அஜித் பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த வகையில் அவருடைய சினிமா கேரியர் மற்றும் வாழ்க்கை பற்றி நிறைய பேசியிருக்கிறார்.

அதாவது திருமணத்திற்கு முன்பே தனது மனைவி ஷாலினியும் பிரபலம்தான். ஆனால் தன்னை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவை விட்டுவிட்டு என்னுடைய வெற்றிக்காக உறுதுணையாக இருந்தார்.

பல சமயங்களில் தான் தவறாக முடிவு எடுத்தாலும் அதை பொறுத்துக் கொண்டு என்னுடன் பயணித்தார். இந்த பத்மபூஷன் விருதுக்கு காரணம் அவர்தான் என்று பெருமையாக பேசி இருந்தார். அதோடு தன்னுடைய ஓய்வு குறித்தும் பேசி உள்ளார்.

வாழ்க்கை தத்துவத்தை கூறிய அஜித்

அதாவது எப்போது ஓய்வு எடுப்பது என்று நான் திட்டமிடவில்லை. ஒரு நேரத்தில் ஓய்வு பெறவேண்டிய தேவை ஏற்படலாம். பொதுவாக மக்கள் தங்களது வாழ்க்கை பற்றி குறை கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

காலை எழுந்தவுடன் உயிருடன் இருப்பதே ஒரு வரம் தான். நான் இங்கு தத்துவமாக இதை பேசவில்லை. என்னுடன் இருக்கும் நண்பர் மற்றும் உறவினர்கள் புற்றுநோயிலிருந்து விலகி வாழ்க்கையில் ஜெய்த்துள்ளனர்.

அவ்வாறு ஒவ்வொரு நொடியையும் வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்ளத்தான் ஆசைப்படுகிறேன் என்று அஜித் கூறியிருக்கிறார். வாழ்க்கை தத்துவத்தை அஜித் இவ்வாறு ஒரு வரியில் கூறிவிட்டார்.