Ajith : அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படம் சரியாக போகவில்லை. கலவையான விமர்சனங்களை தான் பெற்று இருந்தது. அதன் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி வெளியான படம் தான் குட் பேட் அக்லி.
இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் லாபத்தை கொடுத்தது. அஜித்தின் கேரியரை எடுத்துக்கொண்டால் சில மாஸ் ஹிட்டான படங்கள் இருக்கிறது. அதுவும் ஆக்ஷன் படங்களில் பட்டையை கிளப்பி இருப்பார்.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் அஜித் கலந்து கொண்டார். அப்போது பேட்டியாளர் அஜித் நடித்த படங்களில் அவருக்கு பிடித்த சில படங்களை பட்டியல் இடுமாறு கேட்டுக் கொண்டார். அஜித்தும் மாசான நான்கு படங்களை கூறியிருக்கிறார்.
அஜித்துக்கு பிடித்த நான்கு படங்கள்
எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் அஜித், சிம்ரன் நடிப்பில் வெளியான வாலி படம் தனக்கு பிடித்ததாக அஜித் கூறியிருக்கிறார். இந்த படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த அஜித் வில்லத்தனத்தில் மிரட்டி இருப்பார்.
அடுத்ததாக அஜித்தின் நடிப்பில் மாறுபட்ட கோணத்தில் வெளியான படம் தான் வரலாறு. இதில் பெண் பாவனை கொண்ட ஒரு ஆணாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதைத்தொடர்ந்து அஜித்தின் கேரியரில் தூக்கிவிட்ட படம் தான் மங்காத்தா.
அஜித்தை வைத்து வெங்கட் பிரபு மாஸ் சம்பவம் செய்திருந்தார். அதன் பிறகு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான பில்லா படம் தனக்கு பிடித்ததாக கூறியிருக்கிறார். அவ்வாறு அஜித்தின் இந்த நான்கு படங்கள் இடம்பெற்றுள்ளது.