அனுதாப ஓட்டை பெற நடிக்கும் பவானி ரெட்டி.. இதுதான் உங்க யுக்தியா.!

பிக்பாஸ் சீசன்-5 ன் போட்டியாளர்களில் ஒருவர் நடிகை பவானி ரெட்டி. வீட்டிற்கு சென்ற நாளிலேயே அதிக ரசிகர்களை பெற்றவர். தற்போது  இவருக்கென்று ஒரு ஆர்மியும் ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர். சென்ற வாரம் அவர் தனது கணவரை பற்றியும், அவரின் இழப்பை பற்றியும் மிகவும் உருக்கமாக கூறினார். இது ரசிகர்கள் பலரையும் வருத்தமடையச் செய்தது.

பவானியின் கணவருடைய இறப்பிற்குப் பின் தன் நண்பரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆனந்த் ஜாய் என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து பின் பிரிந்து விட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.

பவானியின் தங்கை சிந்து இந்த செய்தியை உறுதிப்படுத்தி தற்போது அவர்கள் பரஸ்பரமாக பிரிந்து விட்டனர் என்று கூறியுள்ளார். இந்நிலையில் ஆனந்த் ஜாய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் பவானிக்கு ஆதரவளிக்குமாறு கூறியுள்ளார். மேலும் பவானி வாழ்க்கையில் நிறைய அனுபவித்து உள்ளதாகவும், அவள் என் சிறந்த தோழி மட்டுமல்ல அதற்கும் மேல் என்று கூறியுள்ளார்.

இதைக் கண்ட ரசிகர்கள் அப்போ நீங்க பிரியல சும்மா நடிக்கிறீங்களா என்று கருத்துக்களைக் கூறுகின்றனர். பவானி பிக்பாஸ்  நிகழ்ச்சியில் அனுதாபத்தை பெற நடிக்கிறார் என்பது அப்பட்டமாக தெரிகிறது.

pavani-reddy-bigg-boss-5-husband-issue
pavani-reddy-bigg-boss-5-husband-issue