Ajith : அஜித் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியானது. விடாமுயற்சி படம் கைவிட்டாலும் அஜித்துக்கு குட் பேட் அட்லி படம் கை கொடுத்தது. இந்த படம் நல்ல வசூல் வேட்டையாடி வந்தது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய நிலையில் ஒரு ஃபேன் பாயாக சம்பவம் செய்திருந்தார். அஜித் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி தீர்த்தனர். எப்போதுமே ஒரு படம் வெளியான ஒரு மாதத்திற்கு உள்ளாகவே ஓடிடியில் வெளியாகும்.
அதேபோல் தான் குட் பேட் அட்லி படத்தை நெட்பிளிக்ஸ் கைபற்றி இருந்தது. அதன்படி மே 8 ஆம் தேதி ஓடிடிக்கு இப்படம் வர இருக்கிறது. ரசிகர்கள் என்ன தான் இந்த படத்தை பலமுறை பார்த்தாலும் மீண்டும் பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள்.
குட் பேட் அக்லி ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அதோடு மட்டுமல்லாமல் குட் பேட் அக்லி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இதே கூட்டணி இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது துபாயில் நடக்க உள்ள கார் ரேஸில் அஜித் கலந்து கொள்ள இருக்கிறார்.
அது முடிந்தபிறகு படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார். மேலும் குட் பேட் அக்லி படம் ஃபேன் பாய் படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்ததாக இணையும் இவர்கள் கூட்டணியில் ஒரு நல்ல கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்க உள்ளாராம்.
ஆகையால் மாஸ் சம்பவத்துடன் இந்த படம் உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் அஜித் சமீபத்தில் பத்மபூஷன் விருது வாங்கிய நிலையில் பிரபலங்கள் மற்றும் சினிமா துறையினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.